தமிழ் திரையுலகில் பிரபலமான தயாரிப்பாளராக வலம் வருபவர், ரவீந்தர். இவர், சில மாதங்களுக்கு முன்பு சீரியல் நடிகை மகாலட்சுமியை கரம் பிடித்தார். இவர்களது திருமணம் பேசு பொருளாக மாறி, தற்போது சிறிது ஓய்ந்திருந்த நேரத்தில், ரவீந்தர் குறித்த ஒரு செய்தி மீண்டும் இணையத்தில் வட்டமடிக்க தொடங்கியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரவீந்தர்-மகாலட்சுமி:


முருங்கைக்காய் சிப்ஸ், மிக மிக அவசரம், நட்புன்னா என்னனு தெரியுமா போன்ற படங்களை லிப்ரா ப்ரொடக்‌ஷன்ஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் தயாரித்து வெளியிட்டுள்ளார். இதனால், தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுள் ஒருவராக வலம் வருகிறார், ரவீந்தர்.  தேவதையை கண்டேன், செல்லமே, அவள் போன்ற  பல தொடர்களில் வில்லி கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர், மகாலட்சுமி. ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி, கடந்த ஆண்டு திருமணம் செய்து பெரும் நெட்டிசன்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகினர். 


மேலும் படிக்க | தனுஷ் இயக்கத்தில் செல்வராகவன்? வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!


ரவீந்தர் மீது வழக்கு பதிவு:


தயாரிப்பாளர் ரவீந்தர் மீது, வெளிநாட்டி வாழ் இந்தியர் ஒருவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். விஜய் என்கிற அந்த நபர் மத்திய குற்றப்பிரிவு போலிசாரிடம் கொடுத்துள்ள புகாரில் ரவீந்தர் தன்னிடம் கிளப் ஹவுஸ் செயலி மூலம் பழகி பண மோசடி செய்ததாக புகார் கொடுத்துள்ளார். க்ளப் ஹவுஸ் செயலி மூலம் தன்னிடம் பழகிய ரவீந்தர், சினிமா நடிகர் ஒருவருக்கு அட்வான்ஸ் கொடுக்க வேண்டும் என்று கூரி தன்னிடம் கடந்த மே மாதம் 20 லட்ச ரூபாய் பணத்தை கடனாக பெற்றதாக அந்த நபர், தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், தன்னிடம் 15 லட்ச ரூபாய்தான் இருந்ததால் அதை இரு தவணையாக ரவீந்தரின் வங்கி கணக்கில் செலுத்தியதாகவும் ரவீந்தர் அந்த பணத்தை பெற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார். பணம் வாங்கிய பிறகு ரவீந்தர் தான் சொன்னபடி பணத்தை திருப்பி தராமல் இழுத்தடித்து வருவதாக அந்த நபர் தனது புகாரில் கூறியுள்ளார். பணத்தை கேட்டால் சில சமயங்களில் ரவீந்தர் அவதூறாக பேசியதாகவும் தற்போது தனது தொலை பேசி எண்ணை ப்ளாக் செய்து வைத்துள்ளதாகவும் விஜய், தன் புகாரில் கூறியுள்ளார். 


பணத்தை மீட்டுத்தர கோரிக்கை..


ரவீந்தர் மீது புகாரளித்துள்ள விஜய், தன் புகாரில் ரவீந்தரிடம் இருக்கும் தனது 15 லட்ச ரூபாய் பணத்தை மீட்டுத்தருமாறு கோரிக்கை வைத்துள்ளார். மேலும், அவருக்கு பணம் கொடுத்ததற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் தன் புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார். 


சமாதானம் பேசிய ரவீந்தர்..? 


ரவீந்தர் மீது கொடுக்கப்பட்ட இந்த புகார் தீயாய் பரவியதை தொடர்ந்து, அவர் தரப்பில் இருந்து புகார் கொடுத்த நபரிடம் சமாதானம் பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ரவீந்தர், தன் மீதான புகாரை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறும் பணத்தை திரும்பு கொடுத்துவிடுவதாக கூறி புகார் கொடுத்த விஜய்யிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. 


வழக்குப்பதிவு:


ரவீந்தர் சமாதனம் பேசியும் பணம் வராததால், அவர் மீது கொடுக்கப்பட்டுள்ள புகாரை விஜய் திரும்ப பெறவில்லை. இதையடுத்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் ரவீந்தர் மீது பண மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து, ரவீந்தர் நேரில் ஆஜராகி விளக்கம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து  நடைபெறும் என்றும் பணத்தை ரவீந்தர் திருப்பி தராவிட்டால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | சிவகார்த்திகேயனுக்கு சாபம் விட்ட மிஷ்கின்-'மாவீரன்’ பட வில்லன் கூறியது என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ