தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீதா ராமன் : இன்றைய செப்டம்பர் 6 ஆம் தேதி எபிசோட் அப்டேட்


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன், இந்த சீரியலில் ராம் சத்யன் வீட்டிற்கு வந்த நிலையில் மறுபக்கம் சீதா கூலாக இருக்க மகாவுக்கு சந்தேகம் வந்தது. 


மேலும் படிக்க | அதிரடி திருப்பங்களுடன் அமுதாவும் அன்னலட்சுமியும் தொடர்! இன்றைய அப்டேட் என்ன?



இதனை தொடர்ந்து இன்றைய எபிசோடில் சீதா ராமுக்கு போன் செய்து நீங்க சத்யனோட ரெஜிஸ்டர் ஆபிஸ் வந்துடுங்க, நான் இன்னும் ஒரு மணி நேரத்தில் இருப்பேன் என்று சொல்ல இதையெல்லாம் ஒட்டு கேட்ட மகாவும் அர்ச்சனாவும் ஏதோ பிளான் பண்ணி இருக்கா, என்னனு தான் தெரியல என்று யோசிக்கின்றனர். 


ஏற்னவே சீதா காலேஜ்க்கு கிளம்பிய பெண்களை கடத்த சொல்ல துரை அதற்கான ஏற்பாடுகளை செய்த நிலையில் சேது மூன்று பெண்களுடன் காரில் வந்து கொண்டிருக்கும் வழி மறித்து பிரச்சனை செய்து கத்தி முனையில் மூன்று பெண்களையும் கடத்தி விடுகின்றனர். 


பிறகு மகாவுக்கு சீதா வேறொரு போனில் இருந்து போன் செய்து மிரட்டல் விடுக்க மகா அதிர்ச்சி அடைகிறாள், கொஞ்ச நேரத்தில் சேதுவும் வீட்டிற்கு வந்து விஷயத்தை சொல்ல மகா யாராக இருக்கும் என தெரியாமல் முழிக்கிறாள். மறுபக்கம் ராம் சத்யனை அழைத்து கொண்டு ரெஜிஸ்டர் ஆபிஸ் வர விஷால் இவர்களை அடித்து தூக்க பின் தொடர்ந்து வருகின்றனர். 


மாலை வாங்குவதற்கான சத்தியன் ஒரு கடையின் அருகே இறங்க விஷாலின் கார் வேகமாக மோத வர கண் இமைக்கும் நொடியில் காப்பாற்றுகிறான் ராம், இங்கே வீட்டிற்கு வரும் சீதா உங்க மூன்று பெண்களையும் கடத்தியது நான் தான், மீராவோட நீங்க ரெஜிஸ்டர் ஆபிஸ் வந்து இந்த கல்யாணத்தை நடத்தி வைக்கணும் இல்லனா உங்க பொண்ணுங்க ரோட்ல செத்து கிடப்பாங்க என்று ஷாக் கொடுக்க மகா வேறு வழியில்லாமல் ஒப்பு கொள்கிறாள். 




இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


சீதா ராமன்: சீரியலை எங்கு பார்ப்பது?


சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 


மேலும் படிக்க | சீதா ராமன் பிரியங்கா நல்காரி புதிய சீரியலில் என்ட்ரி! ஜீ தமிழின் நளதமயந்தியில் கதாநாயகி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ