அதிரடி திருப்பங்களுடன் அமுதாவும் அன்னலட்சுமியும் தொடர்! இன்றைய அப்டேட் என்ன?

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். 

Written by - Yuvashree | Last Updated : Sep 6, 2023, 01:53 PM IST
  • ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர் அமுதாவும் அன்னலட்சுமியும்.
  • இதில் அன்னத்தின் மீது திருட்டுப்பழி விழுகிறது.
  • அடுத்தடுத்த திருப்பங்களுடன் இத்தொடர் பயணித்து வருகிறது.
அதிரடி திருப்பங்களுடன் அமுதாவும் அன்னலட்சுமியும் தொடர்! இன்றைய அப்டேட் என்ன?  title=

தமிழ் டெலிவிஷன் தொடர்களுள் மிகவும் பிரபலமான ஒன்றாக விளங்குவது, அமுதாவும் அன்னலட்சுமியும். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. ரசிகர்களின் மனங்களில் மிகவும் நல்ல இடத்தை பிடித்துள்ள இந்த தொடர், தினம் தினம் புதுப்புது ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழ் ரசிகர்கள் பலரை கவர்ந்துள்ள அமுதாலும் அன்னலட்சுமியும் சீரியலில் சின்னத்திரை பிரபலங்களான கண்மணி மனோகரன், ராஜஸ்ரீ, வடிவுக்கரசி, அருண் பத்மநாபன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இத்தொடர், தற்போது பல எதிர்பாராத விறுவிறுப்பான ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. பலரது மனதை கவர்ந்துள்ள இந்த தொடரில் இன்று பல சுவாரஸ்யமான விஷயங்கள் நடக்க உள்ளன. அவை என்னென்ன தெரியுமா? தொடர்ந்து படியுங்கள். 

இதுவரை நடந்தது…

அன்னலட்சுமி பீரோ இருக்கும் ரூமில் வீட்டை பெருக்கி கொண்டிருக்க, பீரோவில் சாவி இருக்க வீட்டு ஓனர் சாவியை மறந்துட்டோமோ என நினைத்து வந்து பார்த்தவர் சாவி பீரோவில் இருப்பதை பார்த்து நகர்கிறார்.அன்னலட்சுமி எல்லா வேலையும்  முடித்து விட்டேன் என சொல்லி பையை எடுத்து கொண்டு கிளம்புகிறாள்.  பழனியும் அவரது நண்பர் லிங்கமும் மீண்டும் வந்து புதியதாக வாங்கிய நகையை காட்டி உன் பொண்டாட்டி நகையை எடுத்துட்டு வா அதே மாடலான்னு பார்த்துருவோம் என சொல்ல பழனியின் நண்பர் பீரோவை திறந்து பார்க்க அதில் நகை இல்லாமல் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைகிறார். இதனால் அன்னத்தின் மீது திருட்டு பழி விழுந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

மேலும் படிக்க | 'லியோ' படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்யுமா? லோகேஷ் கனகராஜ் பதில்!

இன்றைய அப்டேட்…

அமுதா வடிவேலு  இடுப்பில் சொருகியிருக்கும் பணத்தை பார்த்து விட்டு அவன் சட்டைப் பையை பார்க்க அதில் நகை கடை ரசீது இருப்பதை பார்த்து ஷாக்காகிறாள்.

அதனை தொடர்ந்து அமுதா அன்னலட்சுமியிடமும் மாணிக்கத்திடமும் வடிவேலு தான் ஒரு நகையை எடுத்து அடகு கடையில் வைத்திருப்பதாக சொல்லி மாணிக்கமும் அமுதாவும் அடகு கடைக்கு செல்கின்றனர்.

Amudhavum Annalakshmiyum

மாணிக்கம் அடகு கடைக்காரரிடம் வடிவேலு கொண்டு வந்து வைத்தது திருட்டு நகை என்று சொல்ல அமுதா மிச்சமிருந்த பணத்தை கொடுத்து விட்டு நகையை கேட்கிறாள். 

மாணிக்கம் அமுதாவிடம் நகையை நேரடியாக அந்த வீட்டு ஓனரிடம் குடுத்து விடலாம் என சொல்ல, அமுதா அது சரி வராது, நகையை அத்தை திருடலை இதுக்கெல்லாம் காரணம் பழனி தான்னு நாம நிரூபிக்கனும் என சொல்லிவிட்டு அவரிடம் ஒரு ஐடியா சொல்கிறாள். 

அதை தொடர்ந்து வீட்டில் அன்னலட்சுமி இன்னைக்கு என்னை அரெஸ்ட் பண்ண போறாங்க நம்ம குடும்ப மானமே போகப் போவது என புலம்புகிறாள். வீட்டிற்கு இன்ஸ்பெக்டர், பழனி, வீட்டு ஓனரும் வர இன்ஸ்பெக்டர் காணாம போன அந்த நகை கிடைச்சிருச்சா, இல்ல அரெஸ்ட் பண்ணவா என கேட்க இன்ஸ்பெக்டரிடம் அமுதா நகையை கொடுக்கிறாள்.

இன்ஸ்பெக்டர் நேத்து இல்லேன்னு சொன்னீங்க இப்ப எப்படி வந்துச்சு என கேட்கிறார். மேலும் நகை ஓனர் தான் இனிமே முடிவு பண்ணனும் என சொல்ல, அவர் நான் கேஸ் குடுக்குறேன் என சொல்ல, பழனி அன்னத்தை அரஸ்ட் பண்ண சொல்கிறான். அமுதா ஒரு 5 நிமிஷம் கழிச்சி அரெஸ்ட் பண்ணுங்க என சொல்ல இன்ஸ்பெக்டருக்கு போன் வருகிறது. பழனியின் நண்பன் லிங்கம் இன்ஸ்பெக்டரிடம் நகையை திருடுனது நான் தான், திருட சொன்னது பழனி தான் என சொல்ல பழனி புரியாமல் பார்க்கிறான். 

அமுதா இப்ப உங்க கடமையை தாராளமா செய்யலாம் என சொல்ல, இன்ஸ்பெக்டர் பழனியின் கன்னத்தில் அறைய பழனி நான் என்ன சார் பண்ணுனேன் என கேக்க, நீ திருடிட்டு இவங்க மேல பழியை போடுறியா என சொல்லி இழுத்து செல்கிறார். செல்வம் லிங்கத்தை அடித்து இழுத்து செந்தில் வீட்டுக்கு அழைத்து வர ப்ளாஷ் கட்டில் செல்வம் லிங்கம் வீட்டிற்கு சென்று அவனை மிரட்டி உண்மையை சொல்ல சொன்னது தெரிய வருகிறது. 

அமுதாவும் அன்னலட்சுமியும்

அதனை தொடர்ந்து அமுதா செல்வாவிற்கு நன்றி சொல்ல செல்வா கடவுள் எப்பவும் நல்லவங்களை கை விட மாட்டான் என சொல்லிவிட்டு நகர்கிறார்.  கதிரேசன் போட்டோ முன் நின்று நம்ம குடும்பத்துக்கு வர இருந்த அவமானத்தை நம்ம மருமக தடுத்து நிறுத்திட்டா என சொல்ல அமுதா அன்னலட்சுமியிடம் இனிமே நீங்க வேலைக்கு போக கூடாது என சொல்கிறாள். 

காணத்தவறாதீர்கள்..

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியை இரவு 7 மணிக்கு காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | இந்த வாரம் Netflix, Prime Video, Hotstar, Zee5 ஓடிடி தளத்தில் வெளியாகும் படங்கள் & வெப் சீரியஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News