Top 5 Tamil Serial TRP Rating List : தமிழ் தொலைக்காட்சிகளை பொருத்தவரை, எத்தனை ரியாலிட்டி நிகழ்ச்சிகள் வந்தாலும் சீரியல்கள் மட்டுமே டி.ஆர்.பியில் நின்று பேசும். இதை வைத்துத்தான் எந்த சீரியல் டாப்பில் இருக்கிறது என்பதையும், எது மக்கள் மனங்களில் இடம் பெற்றிருக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ள முடியும். வார இறுதியில் எப்போதும் டி.ஆர்பி ரேட்டிங் லிஸ்ட் வெளிவருவது வழக்கம். அந்த வகையில் எந்தெந்த தொடர்கள் டாப் 5 இடத்தில் இருக்கிறது என்பதை இங்கு பார்ப்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுந்தரி:


சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர், சுந்தரி. சமூகத்தின்  “அழகான பெண்” என்ற கட்டமைப்புக்குள் இல்லாத பெண், எப்படியெல்லாம் பிரச்சனைகளை எதிர்கொள்கிறாள்? என்பதை வைத்து எடுக்கப்பட்ட தொடர் இது. இதில், கேப்ரியல்லா ஐஏஎஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். ஜிஷ்னு மேனன், ஸ்ரீ கோபிகா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களாக வருகின்றனர். இந்த தொடர், டி.ஆர்.பியில் 5வது இடத்தில் இருக்கிறது. 


மருமகள்:


சன் தொலைக்காட்சியில் சில மாதங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட தொடர், மருமகள். இந்த தொடரில் கேப்ரியல்லா சார்ல்டன் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக ராகுல் ரவி நடித்திருக்கிறார். இது, சமீப காலமாக ரசிகர்கள் மனதை கவர்ந்த தொடராக அமைந்திருக்கிறது. இந்த தொடர், டி.ஆர்.பி ரேட்டிங்கில் 4வது இடத்தை பிடித்திருக்கிறது. 


மூன்று முடிச்சு:


ஸ்வாதி கொண்டே, கிருத்திகா, பிரீத்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த தொடர், டி.ஆர்.பியில் 3வது இடத்தில் இருக்கிறது. ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண்ணுக்கும், பணக்கார குடும்பத்தை சேர்ந்த நாயகனுக்கும் நடக்கும் கதைதான், இத்தொடரின் கதைக்களம். 


மேலும் படிக்க | டாப் 6 தமிழ் சீரியல்கள்! இந்த வார டிஆர்பி ரேட்டிங்கை தெரிந்து கொள்ளுங்கள்!



சிங்கப்பெண்ணே:


மனீஷா மகேஷ், தர்ஷிக் கௌடா, நிவேதா ரவி, அமல்ஜித், யோகலக்‌ஷ்மி உள்ளிட்டோர் நடித்திருக்கும் தொடர் சிங்கப்பெண்ணே. ஆனந்தி என்ற கிராமத்து பெண், சென்னைக்கு வந்து தங்கி வேலை பார்க்கும் போது என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்கிறாள், என்பதை இக்கதை காண்பிக்கிறது. டி.ஆர்.பியில் இத்தொடர், 2வது இடத்தை பெற்றுள்ளது. 


கயல்:


கயல் தொடர், கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கும் ஓடி, 900 எபிசோடுகளை கடந்த தொடராகும். இந்த தொடரில், சயித்ரா ரெட்டி கதாநாயகியாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக, சஞ்சீவ் கார்த்திக் இந்த படத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் சேர்ந்து அபி நவ்யா, மீனா குமாரி, ராஹுல் ரவி, காயத்ரி ஜெயராம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரமாக வருகின்றனர். இந்த தொடர், டி.ஆர்.பியில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. 


மேலும் படிக்க | அறிந்துக்கொள்வோம்; TRP-Rating என்றால் என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ