டாப் 6 தமிழ் சீரியல்கள்! இந்த வார டிஆர்பி ரேட்டிங்கை தெரிந்து கொள்ளுங்கள்!

Top 6 Tamil serials: தமிழ் திரைப்படங்களை போலவே, தமிழ் சீரியல்களுக்கும் பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்த வாரம் டிஆர்பியில் டாப்பில் உள்ள சீரியல் எது தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Feb 8, 2024, 09:18 PM IST
  • இந்த வாரத்தின் டாப் 6 தொடர்கள்
  • லிஸ்டில் டாப்பில் இருப்பது யார்?
  • எதிர்நீச்சல் தொடருக்கு எந்த இடம்?
டாப் 6 தமிழ் சீரியல்கள்! இந்த வார டிஆர்பி ரேட்டிங்கை தெரிந்து கொள்ளுங்கள்!

Top 6 Tamil Serials This Week Ethirneechal Siragadikka Aasai Sundhari Serials TRP: பெரிய திரையில் வெளியாகும் படங்களுக்கு ரசிகர்கள் இருப்பது பாேலவே, சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கும் பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர். மாமியார்-மருமகள் சண்டை, காதல் கதை, குடும்ப கதை, பெண்ணியம் பேசும் கதை என தற்போதைய சீரியல்கள் பல வகைகளில் பலதரப்பட்ட பரிமானங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவற்றுள், ஒரு சில சேனல்களின் சீரியல் டிஆர்பி ரேட்டிங் எப்போதும் டாப்பில் இருக்கும். அவை என்னென்ன தொடர்கள்? இந்த வாரம் அதிக டிஆர்பியுடன் மேலிடத்தில் இருக்கும் தொடர் எது? இங்கு பார்ப்போம். 

Add Zee News as a Preferred Source

6.சிறகடிக்க ஆசை:

சமீபத்திய மாதங்களில் வெளியான தொடர்களுள் ரசிகர்களை அதிகமாக ஈர்த்த தொடர், சிறகடிக்க ஆசை. இதில், கோமதி பிரியா நாயகியாக நடிக்க அவருக்கு ஜோடியாக வெற்றி வசந்த் நடிக்கிறார். அனைத்து விஷயங்களிலும் எதிர் துருவங்களாக இருக்கும் இருவர் திருமணம் செய்து கொண்டு அதில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்தான் இந்த தொடரின் கதை. இதில், மீனா கதாப்பாத்திரத்தில் கோமதி பிரியா நடிக்கிறார். வெற்றி வசந்த் முத்துக்குமர் காதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். அனிலா ஸ்ரீகுமார், பாக்கியலக்‌ஷ்மி உள்ளிட்டோரும் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். இத்தொடர் டாப் 5 தொடர்களின் லிஸ்டில் 6வது இடத்தில் உள்ளது. 

5.சுந்தரி:

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வரும் தொடர், சுந்தரி. இந்த தொடரில் கேப்ரியல்லா நாயகியாக நடித்து வருகிறார். நிறம் குறைவாக இருக்கும் தோற்றம் கொண்ட பெண்ணின் சிரமங்களை கூறும் வகையில் எடுக்கப்பட்ட இந்த தொடர், இன்று அவள் ஐஏஎஸ் அதிகாரி ஆன பிறகு எந்த மாதிரியான சவால்களை எதிர்காெள்கிறாள் என்ற பாணியில் கதையை காட்டி வருகிறது. இந்த தொடர், தற்போது டிஆர்பி ரேட்டிங்கிள் 5வது இடத்தில் உள்ளது. 

4.எதிர்நீச்சல்:

சில மாதங்களுக்கு முன்பு வரை டிஆர்பியில் முதலிடத்தில் இருந்து வந்த தொடர், எதிர்நீச்சல். இத்தொடரை திரு செல்வம் இயக்கி வருகிறார். பெண்களின் உரிமை பேசும் தொடரான இதற்கு தமிழகம் முழுவதும் பல கோடி ரசிகர்கள் உள்ளனர். இதில் ஆதி குணசேகரன் கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த மாரிமுத்து சில மாதங்களுக்கு முன்பு காலமானார். இதையடுத்து, அவரது கதாப்பாத்திரத்தில் வேல ராமமூர்த்தி நடித்து வருகிறார். அதிலிருந்தே இந்த தொடரின் டிஆர்பி கொஞ்சம் கொஞ்சமாக இறங்கி வருகிறது. இந்த தொடர், இந்த வாரத்தின் டாப் 5 தொடர்களின் லி”ஸ்டில் 4வது இடத்தில் உள்ளது. 

மேலும் படிக்க | டிராமா போடும் முத்துப்பாண்டி…பாக்கியம் எடுத்த முடிவு - அண்ணா சீரியல் இன்றைய அப்டேட்

3.வானத்தை போல:

ரசிகர்களை அதிகம் ஈர்த்த இன்னொரு பாசமிகு தொடர், வானத்தை போல. இந்த தொடரில் ஸ்ரீகுமார் அண்ணனாக நடிக்க, அவரது பாசமான தங்கையாக ப்ரீத்தி ஷர்மா நடித்து வருகிறார். செந்தி குமாரி, மன்யா ஆனந்த், தமன் குமார் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களை ஏற்று நடித்து வருகின்றனர். இந்த தொடர், டாப் 5 தமிழ் தொடர்களின் லிஸ்டில் 3வது இடத்தில் உள்ளது. 

2.கயல்:

ஒரு பெண், தனது பெரிய குடும்பத்தின் பாரத்தை தூக்கி சுமக்கும் தொடர், கயல். இதில், சயித்ரா ரெட்டி கதாநாயகியாக நடித்து வருகிறார். ‘ராஜா ராணி’ தொடர் புகழ் சஞ்சீவ் கார்த்திக் தொடரின் நாயகனாக நடிக்கிறார். ராகுல் ரவி, அபிநயா, காயத்ரி ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த தொடர், டிஆர்பியில் 2 வது இடத்தில் உள்ளது.

1.சிங்கப்பெண்ணே:

சில மாதங்களுக்கு முன்பு ஆரம்பித்த புதிய தொடர், சிங்கப்பெண்ணே. இந்த தொடரில் மனீஷா மகேஷ் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்து வருகிறார். வெவ்வேறு தொழில் துறையில் இயங்கும் பெண்களை பறைசாற்றும் வகையில் இத்தொடரின் கதை அமைக்கப்பட்டுள்ளது. டாப் 5 தொடர்களின் லிஸ்டில் இத்தெொடர் முதலிடத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | நினைத்தேன் வந்தாய்: அம்மாவின் பாசத்திற்காக ஏங்கிய குழந்தைகள்.. பணமில்லாமல் தவித்த சுடர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News