மத்திய அரசு ஊழியர்கள்

  • Jan 09, 2025, 07:49 AM IST
1 /11

ஏழாவது ஊதியக் குழு அமலுக்கு வந்த பிறகு, மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் அலவன்சுகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றத்தால், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தங்கள் நிதி நிலையில் முன்னேற்றம் அடைந்துள்ளனர். 

2 /11

ஊழியர்களுக்கு அவர்களது சம்பளம் போலவே ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடையும் மிக முக்கியமானவை. இவை பணி ஓய்வு காலத்திற்கான மிக முக்கியமான நிதி ஆதரவாக கருதப்படுகின்றன.

3 /11

எனினும், சமீபத்தில் அரசு பிறப்பித்த உத்தரவு ஒன்று ஊழியர்களை புதிய கவலையில் ஆழ்த்தியுள்ளது. சில மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களை இது பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது என்றும் கூறலாம்.

4 /11

அரசு பிறப்பித்த உத்தரவு என்ன? இதற்கான அரசின் விதி என்ன? இதனால் ஓய்வூதியம் மற்றும்  கிராஜுவிட்டியில் என்ன பாதிப்பு ஏற்படும்? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

5 /11

மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் பணியில் அலட்சியமாக செயல்பட்டால் அவர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் கருணைத் தொகை கிடைக்காது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது மட்டுமல்லாமல், பணியின் போது ஊழியர்கள் கடுமையான குற்றத்தில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டாலும், அவர்கள் இந்த பணிக்கொடை மற்றும் ஓய்வூதியத்தை இழக்க நேரிடும் என இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 /11

மத்திய அரசு இது தொடர்பாக, மத்திய அரசு ஊழியர்களுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையை ஊழியர்களோ அல்லது ஓய்வூதியதாரர்களோ புறக்கணித்தால், அது அவர்களுக்கு பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஒரு ஊழியர் இந்த விதிகளை புறக்கணித்தாலோ அல்லது பணியில் அலட்சியமாக இருந்தாலோ, அவருக்கு ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடையின் பலன் கிடைக்காது.

7 /11

தற்சமயம் மத்திய அரசு ஊழியர்கள் 8வது ஊதியக் குழுவிற்காக காத்திருக்கிறார்கள். இதில் மிகப்பெரிய ஊதிய உயர்வும் ஓய்வூதிய உயர்வும் எதிர்பார்க்கப்படுகின்றது. இப்படிப்பட்ட நேரத்தில் ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடையை இழக்காமல் இருக்க ஊழியர்கள் இந்த எச்சரிக்கையை மிகவும் முக்கியமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

8 /11

மத்திய சிவில் சர்வீசஸ் ஓய்வூதிய விதிகள் 2021 -இன் கீழ் அரசாங்கம் சமீபத்தில் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஒரு ஊழியர் பணியின் போது ஏதேனும் கடுமையான குற்றங்களில் ஈடுபட்டாலோ அல்லது பணியை செய்யாமல் அலட்சியம் காட்டினாலோ, அவருக்கு ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடையின் பலன் கிடைக்காது என்று இந்த அறிவிப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்டது. எனினும், மாநில அரசுகளும் இந்த உத்தரவை அந்தந்த மாநில அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்தலாம் என கூறப்படுகிறது.  

9 /11

பணிக்கொடை மற்றும் ஓய்வூதியத்தை நிறுத்தி வைக்கும் உரிமை, சம்பந்தப்பட்ட ஊழியரின் நியமன அதிகாரத்தில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு வழங்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்படுள்ளது. இது தவிர, தணிக்கை மற்றும் கணக்குத் துறையிலிருந்து ஒரு ஊழியர் ஓய்வு பெற்றால், அவரது ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடையை நிறுத்தி வைக்கும் உரிமையை கம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் (சிஏஜி) பெறுவார். பணியின் போது, ​​துறை ரீதியான அல்லது நீதித்துறை விசாரணையில் ஒரு ஊழியர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.

10 /11

பணி ஓய்வுக்கு பிறகு, ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடையைப் பெற்ற பின்னர், ஒரு ஊழியர் பணிக்காலத்தில் ஏதேனும் தவறு செய்ததாகக் கண்டறியப்பட்டால், அவரது ஓய்வூதியம் அல்லது பணிக்கொடையின் முழு அல்லது பகுதி அளவு தொகை திரும்பப் பெறப்படலாம் என்று மத்திய அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

11 /11

இந்த புதிய அறிவிப்பை ஊழியர்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். தங்கள் பணியின் போது எந்த விதமான அலட்சியத்தையும் ஊழியர்கள் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த தவறுகளால் எதிர்காலத்தில் அவர்கள் ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடையை இழக்க நேரிடலாம். 7வது ஊதியக் குழுவின் கீழ் இந்தப் புதிய விதியின்படி, ஒரு ஊழியரின் ஓய்வூதியம் அல்லது கிராஜுவிட்டி நிறுத்தப்பட்டாலோ அல்லது அது குறைக்கப்பட்டாலோ, அந்த ஊழியருக்கு ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட விதி 44ன் படி மாதம் ஒன்றுக்கு ரூ.9000 குறைந்தபட்ச நிலையான தொகை வழங்கப்படும்.