குழந்தைகளுக்குப் பள்ளிப் பருவத்திலேயே சுற்றுச்சூழல் பற்றிய அறிவுகள் அவர்களுக்கு வளர்க்க ஆரம்பிக்கின்றனர். குழந்தைகள் தினமும் உலக அறிவை தெரிந்து இருக்க வேண்டும். கல்வியறிவு எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்குச் சுற்றுச்சூழல் மற்றும் உலக அறிவு அனைத்தும் அவர்கள் மிகவும் அவசியமான ஒன்று.
சுற்றுச்சூழல் ஆய்வுகள் (EVS) பள்ளியில் பாடமாகக் குழந்தைகள் முதல் மாணவர்கள் வரை தெரிந்திருக்க வேண்டியது அவசியம். ஏனெனில் இது மாணவர்களுக்குப் பொறுப்புணர்வு மற்றும் சுற்றுச்சூழலுக்கான மரியாதையை வளர்க்க உதவுகிறது. அதுமட்டுமல்லாமல், மேலும் அதை எவ்வாறு பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பற்றிய அறிவும் வளர்க்க உதவுகிறது. சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு விழிப்புணர்வை உருவாக்க EVS பாடம் குழந்தைகள் முதல் மாணவர்கள் வரை உதவியாக இருக்கும்.
எதிர்கால வாழ்க்கைக்கு மாணவர்களைத் தயார்ப்படுத்துதல்: மாணவர்களுக்கு வாழ்க்கையின் நிலையான நடைமுறைகளின் அவசியத்தைப் பற்றி அவர்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.
நிலையான வாழ்வை ஊக்குவிக்கிறது: ஆற்றலைப் பாதுகாத்தல் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாத்தல், ஆகியவற்றின் முக்கியத்துவத்தைப் பற்றி EVS பாடத்தின் கீழ் மாணவர்களுக்குக் கற்பிக்கின்றன.
உணர்ச்சி மற்றும் சமூக திறன்களை வளர்த்தல்: மாணவர்கள் உணர்ச்சி மற்றும் சமூக திறன்களை வளர்க்க EVS பாடம் அவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். மேலும் இது சுற்றுச்சூழல் விழிப்புணர்வை மாணவர்களிடையே உருவாக்குகிறது.
பட்டாம்பூச்சி வாழ்க்கை முறை: ஒரு பட்டாம்பூச்சி வாழ்க்கையில் வெவ்வேறு நிலைகளைச் சித்தரிக்கும் தொடர்ச்சியான படங்கள் உள்ளடக்கியிருக்கிறது. இது குழந்தைகளுக்குப் படங்களைப் பார்த்துப் புரிந்து கொள்ளும் தன்மையை ஏற்படுத்துகிறது. பட்டாம்பூச்சியின் சுழற்சி முறையை அறிய உதவுகிறது.
தாவரத்தின் பாகங்கள்: எதற்காக தண்டுகள், வேர்கள், இலைகள், பூக்கள் மற்றும் பழங்கள் உட்படத் தாவரத்தின் பாகங்கள் குழந்தைகளுக்கு இந்தப் பாடத்திட்டத்தின் கீழ் கற்றுத் தரக் காரணம், அவர்களுக்கு இதன் பயன்கள் மற்றும் பலன்கள் பற்றி அறிய உதவுகிறது.
விதை வளர்த்தல்: இந்த பாடத்திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு இதைப் பற்றிக் கற்றுக் கொடுக்க காரணம், அவர்களுக்கு இந்த விதைகள் பற்றியும் அதன் வளர்ச்சி குறித்த அறிவும் தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காக கற்றுக் கொடுக்கப்படுகிறது.
முக்கியத்துவம்: இந்தப் பாடம் குழந்தைகளுக்கு பல்வேறு நோக்கத்திட்டங்களை மேம்படுத்துகிறது. அறிவியல் சார்ந்த அறிவுகளை வளர்க்க உதவுகிறது.
விலங்குகள்: பொதுவாகக் குழந்தைகளுக்கு விலங்கினங்கள் பற்றி ஏதும் தெரியாது. அவர்கள் கல்வியின் மூலமாகத்தான் விலங்குகளின் வாழ்வாதாரங்கள், உணவுகள் மற்றும் அவற்றின் தன்மைகள் பற்றி அறிந்து கொள்ள முடியும். எனவே அவர்களுக்கு இதுவே சிறந்த படியாகும்.