அனைத்து அரசு ஊழியர்களுக்கும் இரட்டை போனஸ் உடன் ஊதிய உயர்வு..!
மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் முதல் அகவிலைப் படி உயரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பென்சன் வாங்குவோருக்கும் ஒரு நற்செய்தி..!
- Jan 17, 2021, 06:32 AM IST
ஜனவரி மாதம் முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப் படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) உயர்த்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்களும், சுமார் 61 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்.
1
/5
தற்போதைய பணவீக்க விகிதம் 28 விழுக்காடுக்கு ஏற்ப அகவிலைப் படி மற்றும் அகவிலை நிவாரணத்தை உயர்த்தும்படி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மத்திய அரசு ஊழியர் கூட்டமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
2
/5
அகவிலைப் படியை உயர்த்தும் முடிவை கொரோனா நெருக்கடி காரணமாக கடந்த ஆண்டு மத்திய அரசு கிடப்பில் போட்டது. மேலும், 2020ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதலான அகவிலைப் படி மற்றும் அகவிலை நிவாரணத்தை செலுத்த வேண்டாம் என முடிவு செய்திருந்தது.
3
/5
2020ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் 2021ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி வரையிலான அகவிலைப் படி மற்றும் அகவிலை நிவாரணத்தின் கூடுதல் தவணையையும் செலுத்த வேண்டாம் என முடிவு செய்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.
4
/5
இதுமட்டுமல்லாமல், ஊழியர்களுக்கான அகவிலைப் படியை 4 விழுக்காடு உயர்த்தவும், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணத்தை 21 விழுக்காடு உயர்த்தவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், கடந்த ஏப்ரல் மாதம் இந்த முடிவை கிடப்பில் போட முடிவு செய்யப்பட்டது.
5
/5
இந்நிலையில், இந்த மாதம் முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப் படி மற்றும் அகவிலை நிவாரணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.