7th Pay Commission: ஜனவரிக்கு முன்பு 53% DA அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படுமா?

7th Pay Commission: DA 53% தாண்டினால் அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இது அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல பலனை கொடுக்கும்.
1 /6

மத்திய அரசு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணத்தை 3% சமீபத்தில் உயர்த்தியது. ஜூலை 1 முதல் அமலுக்கு வந்த இந்த உயர்வு, டிசம்பர் 2024 வரை அமலில் இருக்கும்.     

2 /6

அகவிலைப்படி 53% ஆக உயர்த்தப்பட்டுள்ளதால் அடிப்படை சம்பளத்துடன் DA இணைப்பது பற்றி பேச்சுக்கள் எழுந்துள்ளது. இதற்கு முன்பு அகவிலைப்படி 50% தாண்டிய பொழுது, அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்பட்டது.  

3 /6

இதன் காரணமாக மக்கள் அகவிலைப்படி மீண்டும், அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படுமா என்று எதிர்பார்க்கின்றனர். ஒருவேளை அரசு இணைத்தால் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அதிக பலன்கள் கிடைக்கும்.   

4 /6

அரசு இது குறித்த தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது. அதாவது அகவிலைப்படி 50% கடந்தாலும், அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படாது என்று தெரிவித்துள்ளது.   

5 /6

அரசு அடுத்த அகவிலைப்படி அறிவிப்பை எப்போது வெளியிடும் என்று ஊழியர்கள் ஆர்வமாக பார்த்து கொண்டு உள்ளனர். பொதுவாக இந்த அறிவிப்பு மார்ச் மாதமும், அக்டோபர் மாதமும் இருக்கும்.   

6 /6

அதன்படி அடுத்த டிஏ உயர்வு மார்ச் 2025ல் அறிவிக்கப்பட உள்ளது. நிலுவை தொகையுடன் ஜனவரி 2025 முதல் அமலுக்கு வரும்.