Problems Faced By Housewives At Their Home : நவம்பர் 3ஆம் தேதியான இன்று, இல்லத்தரசிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் இல்லத்தரசிகள் குறித்தும், அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் இங்கு பார்ப்போம்.
Problems Faced By Housewives At Their Home : உலக நாடுகள் பலவற்றில், பெண்கள் இல்லத்தரசிகளாக இருப்பது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. இந்தியாவில், சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை, திருமணமான பெண்கள் வேலைக்கு செல்வது என்பது பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது. தற்போதைய காலக்கட்டத்தில் அது சகஜமாகி விட்டது. இருப்பினும் ஒரு சில பெண்கள் திருமணத்திற்கு பிறகு வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டில் இல்லத்தரசிகளாக இருக்கும் நிலைக்கு ஆளாக்கப்படுகின்றனர். அப்படிப்பட்டவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்னென்ன தெரியுமா?
வீட்டை பார்த்துக்கொள்ளவும், வீட்டில் உள்ளவர்களை பார்த்துக்கொள்ளவும் நேரம் சரியாக இருப்பதால் அவர்கள் அவர்களுக்கு பிடித்த விஷயங்களை செய்வதே இல்லை.
இல்லத்தரசிகளுக்கு, பொருளாதார சுதந்திரம் இல்லாமல் இருப்பது பெரும் குறையாக பார்க்கப்படுகிறது. இதனால், தனது தேவைகளை அவர்கள் சரியாக பூர்த்தி செய்து கொள்வதே இல்லை.
இல்லத்தரசிகள் செய்யும் சமயலுக்கோ, அவர்கள் செய்யும் வீட்டு வேலைக்கோ தகுந்த பாராட்டுகள் அல்லது மரியாதை கிடைப்பதில்லை.
ஒரு சில இல்லத்தரசிகள், வெளியுலகிடம் இருந்து தள்ளி இருப்பதால், தனிமையை உணர்கின்றனர்.
தினமும் காலை எழுந்தது முதல், இரவு உறங்க செல்வது வரை, ஒரே மாதிரியான வேலைகளை செய்வதால் அவர்கள் சோர்வான மனநிலைக்கு ஆளாகின்றனர்.
வீட்டு வேலையையும் பார்த்துக்கொண்டு, வீட்டில் எழும் பிரச்சனைகளையும் சமாளிப்பவர்களாக இருக்கின்றனர் இல்லத்தரசிகள். இதனால், இவர்களின் மனநிலையும் பாழாகிறது.
ஒருவர் இல்லத்தரசியாக இருக்கிறார் என்றால், அவர் வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், நன்றாக சமைக்க வேண்டும் என்றும் எதிர்பார்ப்புகள் வைக்கப்படுகிறது. இந்த எதிர்பார்ப்புகளினால் அவர்கள் பல சமயங்களில் பதற்றத்திற்கு உள்ளாகின்றனர்.
இல்லத்தரசியாக மாறுவதற்கு முன்பு அவர்களுக்கென்று ஒரு வேலை அல்லது தொழில் இருந்திருக்கும். இல்லத்தரசியாக மாறிய பின்பு, இதில் அவர்கள் கவனம் செலுத்தாமல் இருப்பதால், அதில் அவர்களால் வளர முடியாமல் போகிறது.