டம்பெல் தேவையில்லை...தசையை வளர்க்க ‘இந்த’ உடற்பயிற்சிகளை பண்ணுங்க!

Muscle Building Workouts Without Any Equipments : பலர், தசையை வளர்ப்பதற்காக ஜிம்மிற்கு சென்று வெயிட் தூக்குகின்றனர். ஆனால், நாம் வீட்டிலிருந்தே சில உடற்பயிற்சிகள் மூலம் உடலை மிடுக்காக வைத்துக்கொள்ள முடியும். அவை என்னென்ன தெரியுமா?

Muscle Building Workouts Without Any Equipments : அனைவரும், உடலை மிடுக்காக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பதும், அதற்காக பல்வேறு உடற்பயிற்சிகளை மேற்கொள்வதும் மிகவும் சகஜம் ஆகும். இதற்காக பலர் ஜிம்மிற்கு சென்று, அங்கு இருக்கும் உபகரணங்களை வைத்து வர்க்-அவுட் செய்வர். ஆனால், அனைவராலும் ஜிம்மிற்கு சென்று விட முடியாது. அவர்கள், வீட்டிலிருந்தே எந்த வித உபகரணங்களும் இன்றி, வீட்டிலேயே சில உடற்பயிற்சிகளை செய்யலாம். அவை என்னென்ன தெரியுமா? 

1 /8

ஸ்குவாட்ஸ்: இந்த உடற்பயிற்சி, கீழ் உடம்பில் இருக்கும் தசைகளை குறைக்க உதவும். இதனால் தொடை தசைகள் குறைந்து, கால் தசைகள் க்ரிப் ஆக மாறும்.  

2 /8

புஷ் அப்ஸ்: இது, கை தசைகள் மற்றும் மார்பை விரிவடையச்செய்யும் உடற்பயிற்சிகளுள் ஒன்றாகும். நல்ல  பைசப் உடற்பயிற்சியாகவும் இருக்கும். 

3 /8

ப்ளாங்க்ஸ்: அடிவயிற்று தசை, இடையில் இருக்கும் தசைகள் உள்ளிட்டவற்றை குறைக்க உதவும் உடற்பயிற்சி, ப்ளாங்க்ஸ். முதுகு வலி ஏற்படுபவர்களுக்கும் இந்த உடற்பயிற்சி மிகவும் நல்லதாகும். 

4 /8

மவுண்டெயின் க்ளைம்பர்ஸ்: முழு உடல் உடற்பயிற்சிகளுள் ஒன்று, மவுண்டெயின் க்ளைம்பர்ஸ். நல்ல கார்டியோ உடற்பயிற்சியான இது, இதய நோய் அபாயத்தை தடுக்கும் உடற்பயிற்சியாகவும் இருக்கிறது.

5 /8

லஞ்சஸ்: லஞ்சஸ் உடற்பயிற்சி முக்கியமாக தொடை, தொடை எலும்புகள் மற்றும் பின்பகுதி மெருகேற செய்யப்படுகிறது. இதை செய்வதால் இடை மெல்லியதாக ஆவதோடு, தொப்பை குறைந்து தசையும் இருகுமாம்.

6 /8

லெக் ரைசஸ்: இந்த உடற்பயிற்சியை சிக்ஸ் பேக்ஸ் வைத்துக்கொள்வதற்காக பலர் செய்வராம். வயிற்றில் இருக்கும் தசையை குறைக்க இந்த உடற்பயிற்சியை பலர் செய்கின்றனர். 

7 /8

டிப்ஸ்: இதனை தரையில் கை வைத்தும் செய்யலாம், ஒரு நாற்காலியில் கை வைத்தும் செய்யலாம். டம்பெல் வைத்து ட்ரைசப் உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள், இதனை செய்யலாம். மேல் உடலின் தசையை குறைக்க உதவும் இந்த உடற்பயிற்சி, உங்கள் பின்னங்கையை வலுவாக்கி, தசையை இருக வைக்கும். 

8 /8

பர்பீஸ்: முழு உடற்பயிற்சிகளுள் ஒன்று, பர்பீஸ். கலோரிகளை எரித்து, தொப்பையை குறைய வைக்கும் இந்த உடற்பயிற்சியை முதலில் மெதுவாக செய்ய தொடங்க வேண்டும். பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை அதிகப்படுத்தலாம்.