ரசிகர்களுடன் தனது பிறந்த நாளை கொண்டாடிய நடிகர் துருவ் விக்ரம்!

விக்ரமின் மகனும், நடிகருமான துருவ் விக்ரம் சென்னையில் அவரது ரசிகர்களுடன் தனது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

 

1 /6

தமிழ் திரையுலகின் நம்பிக்கை அளிக்கும் இளம் நட்சத்திரமாக வளர்ந்து வரும் நடிகர் துருவ் விக்ரமின் பிறந்தநாளை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடினர்.  

2 /6

இந்நிகழ்விற்காக துருவ் விக்ரமின் ரசிகர்கள் சென்னையில் உள்ள கிருஷ்ணவேணி திரையரங்க வளாகத்தில் திரண்டனர். இதனை தொடர்ந்து  ரசிகர்கள், துருவ் விக்ரமுடன் இணைந்து, அவரது  பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினர்.   

3 /6

அத்துடன் அவருடன் செல்ஃபியும் எடுத்து மகிழ்ந்தனர். இந்த கொண்டாட்டத்தின் அடுத்த கட்டமாக சீயான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் முதன்முதலாக இணைந்து நடித்த 'மகான்' திரைப்படம் தனிப்பட்ட காட்சியாக திரையிடப்பட்டது. இதனை ரசிகர்களுடன் இணைந்து துருவ் விக்ரம் உற்சாகமாக பார்வையிட்டார்.   

4 /6

பிறந்த நாளன்று துருவ் விக்ரம் ரசிகர்களை சந்தித்து கொண்டாடியது... ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது.‌ இந்நிகழ்வை அகில இந்திய சீயான் விக்ரம் நற்பணி மன்ற தலைவரும், மேலாளருமான திரு. சூரிய நாராயணன் ஒருங்கிணைத்திருந்தார்.   

5 /6

துருவ் விக்ரம் இதுவரை ஆதிதியா வர்மா மற்றும் மகான் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் மகான் நேரடியாக ஓடிடியில் வெளியானது.  

6 /6

இதனிடையே நடிகர் துருவ் விக்ரம் தற்போது முன்னணி நட்சத்திர இயக்குநரான மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'பைசன்- காளமாடன்' எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.