வளைகாப்பு புகைப்படத்தை பகிர்ந்த ஆலியா பட் - குழந்தை பிறக்கும் தேதி எப்போது தெரியுமா?

நடிகை ஆலியா பட் - ரன்பீர் கபூர் இணையருக்கு விரைவில் குழந்தை பிறக்க உள்ளது. இந்நிலையில், ஆலியா பட்டிற்கு வளைகாப்பு நிகழ்வு இன்று மும்பையில் உள்ள அவரது வீட்டில் எளிய முறையில் நடந்தது. நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகை ஆலியோ பட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

  • Oct 06, 2022, 22:04 PM IST
1 /6

ஆலியா பட் - ரன்பீர் கபூர் ஜோடி இந்தாண்டு ஏப்.14ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். ஆலியாவின் வயது 29, ரன்பீரின் 40.  

2 /6

இவர்களின் திருமணம் மும்பையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. 

3 /6

ஆலியா பட் தான் கர்ப்பமடைந்து இருப்பதாக கடந்த ஜூன் மாதம் அறிவித்தார். 

4 /6

ரன்பீர் - ஆலியோ, சமீபத்தில் வெளியான 'பிரம்மாஸ்திரா' திரைப்படத்தில்தான், முதல்முறையாக ஜோடியாக நடித்திருந்தனர். 

5 /6

அதற்கு முன்பு, 2016ஆம் ஆண்டு வெளியான 'ஏ தில் ஹை முஷ்கில்' ரன்பீருக்கு ஜோடியாக அனுஷ்கா சர்மா நடித்திருந்தார். அதில், ஆலியா வேறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்

6 /6

இந்த ஜோடிக்கு வரும் அக்.28ஆம் தேதி குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் தேதி குறித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.