தயிரை இந்த முறையில் முகத்திற்கு தடவினால் நல்ல பொலிவு கிடைக்கும்!

சரும பாதுகாப்பிற்கு பல செயற்கையான பொருட்கள் பயன்படுத்தி வந்தாலும், தயிர் மற்றும் பே இலைகள் மூலம் பளபளப்பான சருமத்தை மீண்டும் பெற முடியும். 

 

1 /6

மோசமான உணவு மற்றும் வாழ்க்கை முறை உடல் நலத்தை மட்டும் இல்லாமல் சருமத்திலும் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. கடைகளில் பல சரும கிரீம்கள் இருந்தாலும் அவை பெரிதாக பலனளிப்பதில்லை.  

2 /6

ஒருபுறம் இவை அதிக விலையில் விற்கப்படுகின்றன, மறுபுறம் சிலருக்கும் தோல் அலர்ஜி போன்ற போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இது போன்ற சூழ்நிலையில் முகத்தில் தயிர் தடவினால் நல்ல பொலிவு கிடைக்கும்.  

3 /6

செலிபிரெட்டி போல முகம் பிரகாசம் அடைய, முக கறைகளை நீக்க, வயதான தோற்றத்தை போக்க எளிய வீட்டு வைத்தியம் எப்போதும் பயனுள்ளதாக இருக்கும். பே இலைகள் மற்றும் தயிர் மூலம் பளபளப்பான சருமத்தை பெறலாம்.   

4 /6

பே இலை தூள், தயிர், மஞ்சள்தூள், தேன் ஆகியவற்றை கொண்டு நல்ல ஒரு பேஸ் பேக் தயார் செய்யவும். முகத்தை நன்கு கழுவிவிட்டு இந்த பேக்கை உங்கள் முகம் மற்றும் கழுத்தில் நன்றாக தடவவும்.  

5 /6

நன்கு காய்ந்த பிறகு நீரில் முகத்தை கழுவவும். வாரம் ஒருமுறை அல்லது இரண்டு முறை இவ்வாறு தடவி வந்தால் முகம் பிரகாசமாக இருக்கும்.   

6 /6

முக பளபளப்பு மட்டும் இன்றி பருக்கள், முகப்பரு, வெயிலின் தாக்கம் ஆகியவற்றில் இருந்தும் இந்த பேஸ் பேக் பாதுகாக்கிறது. இந்த பேக்கைப் பயன்படுத்துவதன் மூலம் சருமம் ஈரப்பதமாகிறது, இது வறட்சியையும் நீக்குகிறது.