Masks: முகத்தின் அழகை மறைக்காத முகக்கவசமாகும் நவீன மாஸ்குகள்...

கொரோனா பாதிப்பினால் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டியிருக்கிறது. நகைகளை அணியவே முடியவில்லை. ஏனென்றால், உலோகங்களின் மீதும் வைரஸ் தங்கி ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துமாம்... ஆனால், மாஸ்குக்கு ஏற்பட்ட தேவை, விதவிதமான மாஸ்குகளை கவசம் என்று விற்பனை செய்யும் வியாபாரம் சூடுபிடித்துவிட்டது. 

கொரோனா பாதிப்பினால் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டியிருக்கிறது. நகைகளை அணியவே முடியவில்லை. ஏனென்றால், உலோகங்களின் மீதும் வைரஸ் தங்கி ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துமாம்... ஆனால், மாஸ்குக்கு ஏற்பட்ட தேவை, விதவிதமான மாஸ்குகளை கவசம் என்று விற்பனை செய்யும் வியாபாரம் சூடுபிடித்துவிட்டது. 

முகத்தின் அழகை மறைக்காத முகக்கவசமாகும் நவீன மாஸ்குகள்...மாஸ்க் விற்பனையிலும் போட்டி சூடுபிடித்துள்ளது. ரஜினி, கமல், அஜித், விஜய் என சூப்பர் கதாநாயகர்களின் படம் பொறித்த மாஸ்குகள் மார்க்கெட்டில் சக்கைப் போடு போடுகிறது.

இதோ மாஸ்குகளின் சில மாதிரிகள் உங்களுக்காக...  

1 /11

தங்கம், வெள்ளி என பல விதமான உலோகங்களில் முகக்கவசங்களாக ஆபரணங்கள் வந்துவிட்டன. தற்போது வெயிட்டிங் பிளாட்டினம் மாஸ்குக்குத் தானாம்! கொஞ்சம் ஓவராத் தான் பேஷன் இருக்கு...

2 /11

தங்க மாஸ்கை தயாரிப்பதில் மும்முரமாக இருக்கிறாராம் ஒரு கோயம்புத்தூர் நகைக்கடைக்காரர்... பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் வட இந்தியாவில் இருந்து தங்கம் மற்றும் வெள்ளி முகக்கவசங்களுக்கு நிறைய ஆர்டர்கள் வந்திருக்கிறதாம்... சீச்சீ.... இந்தப் பழம் புளிக்கும்...

3 /11

மனுசங்க தான் மாஸ்க் போடனுமா என்ன? என்று போட்டா போட்டியா?வைர மாஸ்க் வாங்க ஷாப்பிங் போகலாமா?

4 /11

வைர மாஸ்க் வாங்க ஷாப்பிங் போகலாமா?  வசதியிருந்தா வாயை மூடக் கூட வைரம் வாங்கலாம்...ஆனா, வைரத்தை பார்த்து கொரோனாவுக்கும் ஆசை வந்து நெருக்கமாயிட்டா என்ன செய்வீங்க மேடம்? 

5 /11

நாங்களும் மாஸ்க் போட்டிருக்கோம் ஆனா கொஞ்சம் மாடர்ன்...எத்தனை நாள் தான் முகத்தை ஊருக்கு காட்டாம இருக்கறது நீங்களே சொல்லுங்க?

6 /11

கடை பரப்பினாலும், பரப்பாவிட்டாலும் இது கண்டிப்பாக விற்பனையாகிவிடும். முகக்கவசம் போடவில்லை என்றால், கையில் காப்பு போட்டு விடுவாரே போலீஸ்காரர்!

7 /11

கொரோனாவின் வாயை தைக்க முடியாவிட்டாலும், தன்னுடைய வாயை தைத்து விட்டாரோ?

8 /11

அழகுக்கு அழகு சேர்க்க வேண்டாம், என்கிட்ட மோதாதே என்று கொரோனாவுக்கு சவால் விடும் முகக்கவசம் இது...

9 /11

மாஸ்க் வாங்கலையோ மாஸ்க் என்று கூவிக் கூவி விற்க வேண்டாம்..

10 /11

மாஸ்க்கை முகத்துக்கு போடலாம். ஆனால் மொபைலுக்கு போட முடியுமா? அடிக்கடி பயன்படுத்தும் பல பொருட்களின் மேற்பரப்புகளிலும் கொரோனாவின் ஆபத்து இருப்பதை கவனத்தில் வைக்கவும்..

11 /11

இப்படி இருந்தால் கொரோனா என்ன? கொரோனாவின் சந்ததி கூட நெருங்க முடியாது...