ஆகஸ்ட் மாதம் இத்தனை படங்கள் ரிலீஸா? இதோ முழு லிஸ்ட்

Written ByVijaya Lakshmi
Published: Jul 17, 2024, 01:44 PM IST|Updated: Jul 17, 2024, 01:44 PM IST

ஆகஸ்ட் மாதம் சில முக்கிய படங்கள் வெளியாகயுள்ளது. இதில் சின்ன பட்ஜெட் முதல் பெரிய பட்ஜெட் படங்கள் வரை இதில் அடங்கும். அந்த வகையில் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் திரைப்படங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

ஆகஸ்ட் மாதம் தமிழ் சினிமாவில் எந்ததெந்த திரைப்படங்கள் எந்தெந்த தேதிகளில் ரிலீஸ் ஆக உள்ளது என்பதை இந்த பக்கத்தின் மூலம் நீங்கள் தெரிந்துகொள்ளலாம். இந்த பக்கத்தில் அறிவிக்கப்படும் அனைத்து தகவல்களும் தயாரிப்பு நிறுவனம் மற்றும் திரைப்படங்களின் அதிகாரபூர்வமான அறிவிப்பின் அடிப்படையில் தான் பதிவிடப்படுகிறது.

Andhagan1/8

அந்தகன்

பிரசாந்தின் நடிப்பில் தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் அந்தகன். இப்படம் இந்தியில் பெரும் வரவேற்பு பெற்ற ‘அந்தாதூன்’ படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தில் பிரியா ஆனந்த், சிம்ரன், கார்த்திக், யோகி பாபு, ஊர்வசி, கே.எஸ். ரவிகுமார், மனோபாலா, வனிதா விஜயகுமார், செம்மலர், பூவையார் எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது.

 

Boat2/8

போட்

இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் யோகி பேபி, சின்னி ஜெயந்த், எம் எஸ் பாஸ்கர் என பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருக்கும் திரைப்படம். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

Mazhai Pidikatha Manithan3/8

மழை பிடிக்காத மனிதன்

விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சத்யராஜ், சரத்குமார், முரளி சர்மா, தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

 

Vanangaan4/8

வணங்கான்

பாலாவின் இயக்கத்தில் அருண் விஜய் நடித்திருக்கும் 'வணங்கான்' திரைப்படம் ஆகஸ்ட்டில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

 

Raghu Thatha5/8

ரகு தாத்தா

கீர்த்தி சுரேஷின் ‘ரகு தாத்தா’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த்சாமி, ராஜேஷ் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

 

saripodhaa sanivaaram6/8

சரிபோதா சனிவாரம் - சூர்யாவின் சனிக்கிழமை

நானியின் 31வது படமான சரிபோதா சனிவாரம் (சூர்யாவின் சனிக்கிழமை).  அந்தே சுந்தரானிகியை இயக்கிய விவேக் ஆத்யா இதை இயக்கியுள்ளார். நானி, பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா எனப் பலரும் நடித்துள்ளனர். இந்தப் படம் ஆகஸ்ட் 26ம் தேதி வெளியாகிறது.

 

Thangalaan7/8

தங்கலான்

நடிகர் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் தங்கலான். கடந்த ஏப்ரல் மாதத்திலேயே இந்த படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஆகஸ்ட் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

VascoDaGama8/8

வாஸ்கோடகாமா

அறிமுக இயக்குனர் ஆர்.ஜி கிருஷ்ணன் இயக்கத்தில் நகுல் நடித்து வெகுநாட்களாக ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் இருந்த 'வாஸ்கோடகாமா' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த படத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் முனீஸ்காந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.