அக்டோபர் மாத 'சூரிய கிரகணம்' இவர்களுக்கு அசுபமானது, எச்சரிக்கையுடன் இருங்கள்

தீபாவளி 2022 அன்று சூரிய கிரகணம்: சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் மத ஜோதிடத்தில் மங்களகரமானதாக கருதப்படவதில்லை. எனவே, கிரகணத்தின் போது உண்ணவோ, பருகவோ, சுப காரியங்களைச் செய்யவோ தடை செய்யப்படுகிறது. இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் இம்மாதம் அக்டோபரில் நிகழ உள்ளது. தீபாவளிக்கு அடுத்த நாளே இந்த சூரிய கிரகணம் நிகழவிருப்பதால், இது மேலும் கவலைகுறியதாக்கும். அதன்படி இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் 5 ராசிக்காரர்களுக்கு சுபமானதாக கருதப்படாது.

 

1 /5

ரிஷப ராசி: ஜோதிட சாஸ்திரப்படி இந்த சூரிய கிரகணம் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு நல்லதல்ல. அவர்கள் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் மோசமான விளைவு ஏற்படலாம். எனவே உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.  

2 /5

மிதுன ராசி: மிதுன ராசிக்காரர்களின் வேலை அல்லது வியாபாரத்தில் மாற்றம் ஏற்படலாம், இது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே மிகவும் கவனமாக முடிவெடுக்க வேண்டிய நேரம் இது. நிதி இழப்பும் ஏற்படலாம்.

3 /5

கன்னி ராசி: தீபாவளியன்று சூரிய கிரகணம் கன்னி ராசிக்காரர்களுக்கு நல்லதல்ல. வெளிநாடுகளுடன் தொடர்புடைய தொழில் செய்பவர்கள், இந்த நேரத்தில் பெரிய முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும். இல்லையெனில், சேதம் ஏற்படலாம். செலவுகளும் அதிகரிக்கும்.

4 /5

துலாம் ராசி: சூரிய கிரகணத்தின் போது சூரியன் துலாம் ராசியில் இருப்பதால், இந்த கிரகணம் துலாம் ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஆரோக்கியத்தில் மோசமான விளைவு ஏற்படலாம். 

5 /5

விருச்சிக ராசி: தீபாவளிக்கு மறுநாள் சூரிய கிரகணம் ஏற்படுவது விருச்சிக ராசிக்காரர்களுக்கும் தீங்கு விளைவிக்கும். நிதி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இது தவிர கசப்பாக பேசுவதும் தீங்கு விளைவிக்கும். குடும்பத்தில் டென்ஷன் வரலாம்.