மிஸ் பண்ணிடாதீங்க.. இந்த படங்களை கட்டாயம் குடும்பத்துடன் பார்க்கவும்

இந்த தமிழ் படங்களை கட்டாயம் உங்கள் குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கவும். மிஸ் பண்ணிடாதீங்க

இந்த வார இறுதியில் குடும்பத்துடன் நல்ல திரைப்படங்கள் பார்க்க வேண்டும் என்று நினைத்தால் OTT யில் வீட்டில் இருந்தபடி திரைப்படங்கள் பார்த்து மகிழுங்கள். இந்த படங்களை நீங்கள் Netflix, Prime Video, Disney+ Hotstar, JioCinema, Zee5 மற்றும் பிற OTT தளங்களில் பார்க்கலாம். 

1 /8

மலையாளத்தில் வெளியான ‘த்ரிஷ்யம்’ படத்தின் ரீமேக் தான் ‘பாபநாசம்’. இப்படத்தில் நடிகர் நடிகையாக கமல் ஹாசன் மற்றும் கௌதமி தடிமல்லா நடித்துள்ளனர். இந்த படத்தை நீங்கள் அமேசான் பிரைம் வீடியோவில் காணலாம்.  

2 /8

2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் விக்ரம் வேதா. புஷ்கர் மற்றும் காயத்ரி  இத்திரைப்படத்தை இயக்கி இருந்தார். மாதவன் மற்றும் விஜய் சேதுபதி முன்னணி பாத்திரங்களில் நடித்திருந்தனர். சாரதா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர் மற்றும் ஜான் விஜய் ஆகியோர் துணைக் கதாப்பாத்திரங்களாக நடித்திருந்தனர். இந்த படத்தை நீங்கள் அமேசான் பிரைம் வீடியோவில் காணலாம்.  

3 /8

மெர்சல் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இதில் விஜய், காஜல் அகர்வால் ஆகியோர் நடித்துள்ளனர். பாக்ஸ்ஆபிஸில் 200 கோடி வசூல் செய்த படம் இதுவாகும்.   

4 /8

சூப்பர் டீலக்ஸ் 2019 ஆம் ஆண்டில் வெளியான தமிழ்த் திரைப்படம். தியாகராஜன் குமாரராஜா இந்த படத்தை இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி, பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், விஜய் ராம் , அப்துல் ஜபார் மற்றும் நவீன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இந்த படத்தை நீங்கள் ஆஹா தளத்தில் காணலாம்.  

5 /8

சூரரைப் போற்று 2020 ஆம் ஆண்டு வெளியான படம் ஆகும். இந்த திரைப்படத்தை பெண் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கி உள்ளார். திரைப்படத்தில் முக்கிய கதாபத்திரங்களை சூர்யா மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோர் ஏற்றனர். ஊர்வசி, மோகன் பாபு மற்றும் கருணாஸ் ஆகியோர் துணை கதாப்பத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை நீங்கள் அமேசான் பிரைம் வீடியோவில் காணலாம்.  

6 /8

2021 ஆம் ஆண்டில் சூர்யா நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் ஜெய் பீம். இத்திரைப்படத்தை டி. செ. ஞானவேல் இயக்கியிருந்தார். இதில் பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை நீங்கள் அமேசான் பிரைம் வீடியோவில் காணலாம்.  

7 /8

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், யோகிபாபு என தமிழ் திரைப்பட முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடித்திருக்கும் நகைச்சுவை மற்றும் அதிரடி - திரில்லர் திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். இந்த படத்தை நீங்கள் நெட்பிளிக்ஸ் தளத்தில் காணலாம்.   

8 /8

2021 ஆம் ஆண்டில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் கர்ணன். இத்திரைப்படத்தை மாரி செல்வராஜ் எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார். இதில் யோகி பாபு, லால், நடராஜன் சுப்பிரமணியம் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தை நீங்கள் அமேசான் பிரைம் வீடியோவில் காணலாம்.