வனிதா வீட்டு திருமணத்தில் பிக்பாஸ் நட்சத்திரங்கள்! ‘அவங்கள’ காணுமே..!

Bigg Boss 7 Tamil: பிக்பாஸ் 7 போட்டியாளர்கள் வனிதாவின் இல்லத்திருமண விழாவில் கலந்து கொண்டுள்ளனர். அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 

Bigg Boss 7 Tamil Contestants: பிக்பாஸ் 7 போட்டி, இரண்டு வாரங்களுக்கு முன்பு முடிவடைந்தது. இந்த போட்டி மூலம் நண்பர்களான போட்டியாளர்கள், வெளியிலும் மீட்டிங் போட்டு வருகின்றனர். அப்படி, அவர்கள் நடிகை வனிதாவின் இல்லத்திருமண விழாவில் கலந்து கொண்டு, எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

1 /7

கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம் தொடங்கிய நிகழ்ச்சி பிக்பாஸ் 7. இதில் 22 பேர் போட்டியாளர்களாக நுழைந்தாலும், வைல்டு கார்டு மூலம் போட்டியாளராக நுழைந்த ஆர்.ஜே.அர்ச்சனாதான் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

2 /7

இந்த நிகழ்ச்சி மூலம், சில போட்டியாளர்கள் நெருங்கிய நண்பர்களாக மாறினர். பூர்ணிமா, மாயா, நிக்ஸன், விஜய் வர்மா, ஜோவிகா, அக்‌ஷயா ஆகியோர்தான் அந்த நண்பர்கள். இவர்கள், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகும் வெளியில் அடிக்கடி மீட்டிங் போட்டு வருகின்றனர். 

3 /7

பிக்பாஸ் 7 போட்டியாளர் ஜோவிகாவின் தாயும், முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரும் நடிகையுமான வனிதா விஜயகுமார், தனது இன்ஸ்டா பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில், பூர்ணிமா, நிக்ஸன், விஜய் வர்மா, ஜோவிகா உள்ளிட்டோர் இடம் பெற்றிருக்கின்றனர். 

4 /7

இது, வனிதாவின் இல்லத்திருமண விழா என்று கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் அனைவரும் சாப்பிடும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது. ஆனால், இதில் ஒரு போட்டியாளரை மட்டும் காணவில்லை என ரசிகர்கள் கமெண்ட் செக்‌ஷனில் கேட்டுள்ளனர். 

5 /7

பிக்பாஸ் 7 போட்டியின் இரண்டாவது ரன்னர் அப் பட்டத்தை வென்ற மாயாவைத்தான் அனைத்து ரசிகர்களும் போட்டோக்களில் தேடி வருகின்றனர். 

6 /7

மாயா, சில நாட்களுக்கு முன்னர் வனிதாவின் வீட்டில் ஜோவிகா, கானா பாலாவையும் நேரில் சந்தித்துள்ளார். அப்போது எடுத்த புகைப்படத்தையும் வனிதா வெளியிட்டார். 

7 /7

ஜோவிகா உள்பட, அனைத்து பிக்பாஸ் போட்டியாளர்களும் தற்போது பிற ஷோக்கள், படங்களில் பிசியாகியுள்ளனர்.