மிக்ஜாம் புயல்: இடி மின்னலுடன் கனமழை பெய்யும்போது மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை
- மிக்ஜாம் புயல் கரையை நெருங்கும்போது இடி மின்னலுடன் கனமழை பெய்யும். அப்போது இடி மின்னல் சத்தம் அதிகமாக இருந்தால் வீட்டின் கதவு, ஜன்னல் ஆகியவற்றை அடைத்து வைத்துக் கொள்ளுங்கள்
- இடி மின்னல் மற்றும் மழை குறித்த லேட்டஸ்ட் தகவல்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து தொலைகாட்சியை பாருங்கள் - முடிந்தளவுக்கு பயணத்தை தவிர்க்க முயற்சி செய்யுங்கள். வீட்டிக்குள்ளேயே இருங்கள்
- கனமழையின்போது குழந்தைகள் மற்றும் வீட்டு விலங்குகள் வீட்டில் இருந்து வெளியேறாமல் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் - மின்சாதங்களை ஆஃப் செய்து வையுங்கள். தேவையின்றி எந்த மின்சாதனத்தையும் உபயோகிக்க வேண்டாம்.
- மழை நீரில் குளிப்பதை தவிர்க்கவும். ஓடும் நீரில் இருந்து விலகியிருங்கள் - மின் கடத்தும் பொருட்களிடம் இருந்து மிக மிக கவனமாக இருப்பது அவசியம்
- தொலைபேசிகள் சார்ஜ் போட்டுக் கொண்டே பயன்படுத்தவே கூடாது. மழையின்போது அவ்வாறு செய்தால் ஆபத்து இருமடங்கு. - ஒருவேளை மழையின்போது வெளியில் இருந்தால் உடனடியாக பாதுகாப்பான இடத்துக்கு செல்ல வேண்டும்
- வெள்ளம் மற்றும் மழைநீர் வர வாய்ப்பில்லாத பகுதியில் தங்கியிருங்கள் - மின்னல் அதிகமாக இருக்கும் இடத்தில் நீண்ட வாக்கில் படுக்க வேண்டாம், மரங்களுக்கு அடியில் ஒதுங்காதீர்கள்
- மின்னலை ஈர்க்கக்கூடிய சைக்கிள்கள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களில் இருந்து இறங்கவும். - படகில் சென்றால் அல்லது நீச்சல் அடித்துக் கொண்டிருந்தால் இடி மின்னலுக்கு முன்பு பாதுகாப்பான இடத்துக்கு செல்லுங்கள்
- புயல் கரையை கடக்கும்போது வாகனத்தில் இருந்தால், அப்படியே இருங்கள். வாகனத்தில் இருந்து வெளியே வர வேண்டாம் - காரின் ஜன்னல்கள் மூடியிருக்க வேண்டும், மரங்கள் மற்றும் மின்கம்பிகளுக்கு அடியில் காரை நிறுத்த வேண்டாம் - மின்னல் தாக்கினால் முதலுதவி எப்படிசெய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அவசர காலத்தில் உதவியாக இருக்கும்.