பிக்பாஸில் இருந்து எவிக்ட் செய்யப்பட்ட விஜய் வர்மா வாங்கிய சம்பளம் இவ்வளவா!

Vijay Varma Salary for Bigg Boss 7: பிக்பாஸ் போட்டியில் இருந்து கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட போட்டியாளர், விஜய் வர்மா. இவர் அந்த வீட்டில் இருந்த போது ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்ற விவரம் வெளியாகியுள்ளது. 

1 /8

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. இதன் மூன்றாவது வாரத்தில் எவிக்ட் செய்யப்பட்ட போட்டியாளர், விஜய் வர்மா. 

2 /8

விஜய் வர்மா, பிக்பாஸ் இல்லத்திற்குள் கடைசி போட்டியாளராக உள் நுழைந்தார். முதல் வாரத்தின் கேப்டனாகவும் இவரே தேர்ந்தெடுக்கப்பட்டார். தனக்கு கொடுக்கப்பட்ட கேப்டன்ஸி டாஸ்குகளை இவர் நன்றாகவே செய்தார். 

3 /8

விஜய்க்கு பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் உறுதுணையாக இருந்தனர். இவர், முதல் வாரத்தில் நேரடியாக மிரட்டல் விடுப்பது போல பேசியதால் இவருக்கு முதல் வார்னிங் கொடுத்தார் கமல்ஹாசன். 

4 /8

ஒரு டாஸ்கில் விஜய் மற்றும் விஷ்ணு ஆகியோர் பயங்கரமாக மோதிக்கொண்டனர். இந்த டாஸ்கின் போது பிரதீப்பிற்கு விஜய்யால் அடிப்பட்டது. இதனால்தான் இவர் பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. 

5 /8

விஜய் வர்மா, பிக்பாஸ் இல்லத்திற்குள் வருவதற்கு முன்னர் பல தமிழ் படங்களில் நடன கலைஞராக பணி புரிந்துள்ளார். குறிப்பாக, ‘தலைவா’ படத்தில் விஜய்யுடன் ஒன்றாக சேர்ந்து நடனமாடும் கதாப்பாத்திரத்தில் இவர் நடித்திருப்பார். 

6 /8

விஜய் வர்மா, உடற்பயிற்சி கூடம் ஒன்றினை வைத்து நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. 

7 /8

பிக்பாஸ் போட்டியாளர்களாக இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு நாளைக்கான சம்பளம் இவ்வளவு என்று ஒதுக்கப்பட்டுள்ளது. அது போல விஜய் வர்மாவின் ஒரு நாளைக்கான சம்பளமும் அவர் மொத்தமாக பெற்றுக்கொண்ட தொகை எவ்வளவு என்பது குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. 

8 /8

விஜய் வர்மாவிற்கு ஒரு நாளைக்கு ரூ.15 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாம். இவர், மொத்தமாக 21 நாட்கள் பிக்பாஸ் இல்லத்தில் இருந்துள்ளார். அந்த வகையில், இவருக்கு மொத்தமாக 3 லட்ச ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.