யாரு இது நம்ம Bigg Boss ஜூலியா?... ரசிகர்களை அலரவிடும் வேற லெவல் போட்டோ ஷூட்!!

தனது போட்டோ ஷூட்டைக் கிண்டல் செய்தவர்களுக்கு, இன்ஸ்டாகிராம் பதிவில் பதிலடி கொடுத்துள்ளார் ஜூலி..!
  • Sep 19, 2020, 13:39 PM IST

தனது போட்டோ ஷூட்டைக் கிண்டல் செய்தவர்களுக்கு, இன்ஸ்டாகிராம் பதிவில் பதிலடி கொடுத்துள்ளார் ஜூலி..!

1 /12

ஜல்லிக்கட்டுப் போராட்டம், பிக் பாஸ் நிகழ்ச்சி ஆகியவற்றின் மூலம் பிரபலமானவர் ஜூலி. அதனைத் தொடர்ந்து சில தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். எப்போதுமே சமூக வலைதளத்தில் ஆற்றலுடன் இயங்கி வருபவர் ஜூலி.

2 /12

சில தினங்களுக்கு முன்பு தொழிலதிபர் ஒருவரை ஜூலி திருமணம் செய்யவுள்ளார் என்று தகவல் பரவியது. இதற்கு அவர் மறுப்புத் தெரிவித்தார்.

3 /12

கொரோனா ஊரடங்கில் வித்தியாசமான கெட்டப்களில் போட்டோ ஷூட் எடுத்து, அதை தனது சமூக வலைதளத்தில் ஜூலி வெளியிட்டு வருகிறார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

4 /12

தற்போது முழுக்க கறுப்பு மை, கோல்டன் கலர் மை ஆகியவற்றைப் பூசி போட்டோ ஷூட் ஒன்றை எடுத்து ஜூலி வெளியிட்டுள்ளார். இது தொடர்பாகப் பலரும் ஆதரவாகவும், கிண்டல் செய்தும் கருத்துகள் வெளியிட்டு வருகிறார்கள். 

5 /12

அவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அந்த போட்டோ ஷூட் உருவான விதத்துக்கான வீடியோ ஒன்றைத் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் பகிர்ந்து ஜூலி கூறியிருப்பதாவது: "கேலி செய்பவர்கள் கேலி செய்வார்கள். ஆனால், வெற்றியாளர்கள் முன்னேறிச் சென்று விடுவார்கள். இறுதியில் இது கேலி செய்யப்படும் என்று நாங்கள் அறிவோம். 

6 /12

கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, படைப்பாற்றல் பற்றியெல்லாம் யாருக்கும் கவலை இல்லை. அவர்களைப் பொறுத்தவரை அடுத்தவரின் உழைப்பைக் கேலி செய்யவேண்டும். பரவாயில்லை. இதைச் செய்தோம், நிரூபித்தோம் என்பதில் எங்களுக்குப் பெருமை" என ஜூலி தெரிவித்துள்ளார்.

7 /12

8 /12

9 /12

10 /12

11 /12

12 /12