டென்னிஸ் வரலாற்றில் இந்தியரின் மகத்தான சாதனை... 43 வயதிலும் மிரட்டும் போபண்ணா!

Rohan Bopanna: டென்னிஸ் வரலாற்றில் இந்திய வீரர் ரோஹன் போபண்ணா நம்பர் 1 இடத்திற்கு முன்னேறி, ஒரு அரிய சாதனையையும் படைத்துள்ளார். அதுகுறித்து இங்கு முழுமையாக காணலாம். 

  • Jan 24, 2024, 18:33 PM IST

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெறுகிறது. இதில் ஆடவர் இரட்டையர் பிரிவில் ரோஹன் போபண்ணா அரையிறுதி சுற்றுக்கு முதல் முறையாக முன்னேறி உள்ளார். மேலும், தரவரிசையில் நம்பர் 1 இடத்திற்கு முன்னேறி யாரும் செய்யாத சாதனை டென்னிஸ் வரலாற்றில் படைத்துள்ளார், ரோஹன் போபண்ணா. 


 

 

 

 

1 /7

Rohan Bopanna World No 1 Record: இந்தாண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதன் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர் ரோஹன் போபண்ணா அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.   

2 /7

ரோஹன் போபண்ணா மற்றும் அவரது போட்டி இணையரான ஆஸ்திரேலிய வீரர் மாத்யூ எப்டன் ஆகியோர் கால் இறுதிச் சுற்றில் அர்ஜென்டினாவின் மாக்ஸிமோ கோன்ஸாலெஸ் மற்றும் ஆண்ட்ரேஸ் மோல்டினி இணையரை வீழ்த்தியது.  

3 /7

கால் இறுதிச் சுற்று சுமார் ஒரு மணிநேரம் 46 நிமிடம் வரை நீடித்த நிலையில், 6-4, 7-6(5) என்ற நேர் செட்டில் போபண்ணா - மாத்யூ ஜோடி வெற்றி பெற்றது.

4 /7

இதுவரை 17 முறை ஆஸ்திரேலிய ஓபனில் விளையாடி உள்ள ரோஹன் போபண்ணா முதல் முறையாக அரையிறுதிக்கு சென்றுள்ளார்.   

5 /7

இந்த ஜோடி அரையிறுதியில் தாமஸ் மாக்ஹாக் மற்றும் Zhizhen Zhang ஆகிய இணையை சந்திக்கிறது.

6 /7

உலக டென்னிஸ் தரவரிசையில் இரட்டை பிரிவு வீரர்களின் பட்டியலில் 43 வயதான ரோஹன் போபண்ணா நம்பர் இடத்தை பிடித்துள்ளார். 

7 /7

இதன்மூலம், டென்னிஸ் வரலாற்றில் நம்பர் 1 இடத்தை பிடித்த வயது மூத்த வீரர் என்ற பெருமையை போபண்ணா பெற்றுள்ளார்.