கார் வாங்கணுமா? மாருதி நிறுவனம் அதிரடியான சலுகைகளை வழங்குகிறது, ரூ. 48,000 தள்ளுபடி

Maruti Suzuki Offers: இந்த பண்டிகை காலத்தில் நீங்கள் ஒரு புதிய காரை வாங்க திட்டமிட்டிருந்தால், இந்த செய்தி உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். மாருதி சுசுகி தனது கார்களில் ரூ. 48,000 வரை தள்ளுபடியை அளிக்கின்றது. மாருதி சுஸுகியின் இந்த கார்கள் சிறந்த அம்சங்கள் மற்றும் தோற்றத்துடன் வருகின்றன.

1 /5

நாட்டின் மலிவான கார் என்று கூறப்படும், மாருதி ஆல்டோவின் ஸ்டாண்டர்ட் ட்ரிம்மை வாங்கினால் ரூ. 38,000 வரையிலான நன்மைகளைப் பெறலாம். இது தவிர, மாருதி ஆல்டோவின் Alto Lxi, Vxi மற்றும் Vxi+ வகைகளில் ரூ .43,000 வரை தள்ளுபடியைப் பெறலாம். அதன் சிஎன்ஜி வேரியன்டில் ரூ. 18,000 தள்ளுபடி கிடைக்கும்.   

2 /5

மாருதியின் புகழ்பெற்ற கார் மாருதி சுசுகி எஸ்-பிரஸ்ஸோவில் (Maruti Suzuki S-Presso) ரூ. 48,000 வரை தள்ளுபடி கிடைக்கிறது. மாருதி சுஸுகியின் இந்த கார் சிறந்த அம்சங்களுடன் வருகிறது.

3 /5

மாருதி சுசுகி நிறுவனத்தின் டால் பாய் என்று அழைக்கப்படும் மாருதி வேகன்ஆர்-ஐ வாங்கினால் ரூ. 17,500 வரையிலான சலுகையை நிறுவனம் வழங்குகிறது. இது மட்டுமல்ல, நீங்கள் மாருதி வேகன்ஆர் சிஎன்ஜி மாடலை வாங்கினால், இதில் ரூ .1500 வரை தள்ளுபடியும் கிடைக்கும்.

4 /5

நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் ஹேட்ச்பேக் கார்களில் ஸ்விஃப்ட்டில் இந்த மாதத்தில் நீங்கள் பெரிய தள்ளுபடியைப் பெறலாம். இந்த காரை வாங்கும்போது நிறுவனம் ரூ. 24,500 வரை சலுகைகளை வழங்குகிறது.

5 /5

மாருதியின் ஸ்டைலான சப்-காம்பாக்ட் செடான் மாருதி சுசுகி டிசைரிலும் தள்ளுபடி கிடைக்கிறது. இந்த கார் வாங்கும் போது ரூ. 19,500 வரை தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் கிடைக்கின்றன. இந்த சலுகைகளை சரியாகப் பெற நீங்கள் மாருதியின் டீலரைத் தொடர்பு கொள்ளலாம்.

You May Like

Sponsored by Taboola