அனைத்து கிரகங்களும் பல வித மாற்றங்களை மேற்கொள்கின்றன. ராசி மாற்றம், நட்சத்திர மாற்றம், உதய, அஸ்தமன நிலைகள், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என இப்படி பல மாற்றங்கள் கிரகங்களில் ஏற்படுகின்றன.
சனி பகவான் அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக பார்க்கப்படுகிறார். அவரது சிறிய அசைவுகளும் பெரிய ஜோதிட நிகழ்வுகளாக பார்க்கப்படுகின்றன. அவர் ஒரே ராசியில் நீண்ட நாட்களுக்கு இருப்பதால், அவரது தாக்கமும் ராசிகளில் அதிகமாக உள்ளன.
தற்போது சனி பகவான் தனது சொந்த ராசியான கும்பத்தில் இருக்கிறார். இந்த ஆண்டு முழுவதும் அவர் இந்த ராசியில் இருப்பார். சில நாட்களுக்கு முன்னர் சனி அஸ்தமன நிலையிலிருந்து மாறி உதயமாகியுள்ளார். சனி உதயம் ஒரு மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
சனி உதயத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான நல்ல பலன்கள் கிடைக்கும். அனைத்து பணிகளிலும் வெற்றி கிடைக்கும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம்.
சனி பகவான் தற்போது கும்ப ராசியில் உள்ளார். கும்பத்தில் அவரது உதயம் மேஷ ராசிக்காரர்களுக்கு பல வித நல்ல பலன்களை அளிக்கும். வேலை தேடிக்கொண்டு இருக்கும் கும்ப ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஏற்கனவே வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். வணிகத் துறையில் இருக்கும் மேஷ ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் அதிக லாபம் ஈட்ட ஒரு நல்ல வாய்ப்பு இப்போது கிடைக்கும்.
சனி உதயம் மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களைக் கொண்டுவரும். நீங்கள் செய்யும் அனத்து பணிகளிலும் வெற்றி பெறுவீர்கள். குறிப்பாக அரசியல் துறையில் இருக்கும் மிதுன ராசியினருக்கு பெரிய பதவிகள் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்த காலத்தில் நிதி நிலை மேம்படும். கடன்கள் அனைத்தையும் அடைத்து விடுவீர்கள். பண வரவு அதிகமாகும்.
சிம்மம்: சனியின் உதயம் சிம்ம ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். நிதி ஆதாயம் கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். லாபம் கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அன்பும் அதிகரிக்கும். அலுவலகத்தில் மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் நல்ல ஆதரவு கிடைக்கும். குடும்பத்தாருடன் சுற்றுலா சென்று வருவீர்கள்.
கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் உதயத்தால் பல வித சாதகமான பலன்கள் கிடைக்கப் போகிறன. கன்னி ராசி மாணவர்கள் வெளிநாட்டில் படிக்கும் பொன்னான வாய்ப்பைப் பெறப்போகிறார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். இப்போது செய்யப்படும் முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல லாபம் உண்டாகும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள கன்னி ராசிக்காரர்களுக்கு அதிக ஆர்டர்கள் கிடைத்து வருமானம் கூடும்.
தனுசு: வணிகத்தில் ஈடுபட்டிருகும் தனுசு ராசிக்காரர்களுக்கு புதிய தொடர்புகள் கிடைக்கும். இதனால் ஆதாயம் கிடைக்கும். இது வணிகத்தை அதிகரிக்க உதவியாக இருக்கும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். வணிகத் துறையில் இருப்பவர்களுக்கு புதிய மற்றும் பெரிய அளவிலான லாபத்தைத் தரும். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.