இன்னும் 41 நாட்களில் நடக்கும் குரு பெயர்ச்சி, இந்த ராசிகளுக்கு நல்ல நாட்கள்

Guru Peyarchi Palangal 2024 : செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் ஆகியவற்றின் காரணியான குரு மேஷ ராசியில் பயணித்து வரும் நிலையில் தற்போது மே 1 ஆம் தேதி ரிஷப ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறது. இதனால் எந்த ராசிக்கு பதவி உயர்வு, குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று பார்ப்போம்.

Guru Peyarchi Palangal, Jupiter Transit 2024: நவகிரகங்களில் மிகவும் மங்களகரமான கிரகமாக விழாயன் கருதப்படுகிறது. அதன்படி இந்த கிரகத்தின் பெயர்ச்சியானது மிகவும் முக்கியவாந்த நிகழ்வாகும், தற்போது சரியாக இன்னும் 41 நாட்களில் அதாவது மே மாதம் 1 ஆம் தேதி மதியம் 02:29 மணிக்கு குரு பெயர்ச்சி ரிஷப ராசியில் (கார்த்திகை, ரோகிணி, மிருகஷீரிடம் உள்ளிட்ட நட்சத்திரங்களில் பயணம் செய்வார்) நடக்கப் போகிறார். இதனால் எந்த ராசிக்காரர்களுக்கு திடீர் ஜாக்பாட் அடிக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

1 /7

குரு பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு நிதி நெருக்கடியில் இருந்து விடுதலை கிடைக்கும். வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். தள்ளிப்போன சுபநிகழ்ச்சிகள் மீண்டும் கோலாகலமாக நடக்கும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். 

2 /7

குரு பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு திருமணம் கைக்கூடும். குழந்தைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். நல்ல செய்தி தேடி வரும். குரு பெயர்ச்சி காலத்தில் அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். 

3 /7

குரு பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரகளுக்கு சுப செலவுகள் அதிகரிக்கும். சொந்த வீடு வாங்குவீர்கள், அல்லது கட்டுவீர்கள். புதிய வாகனம் வாங்கலாம். பதிவு உயர்வு கிடைக்கும்.

4 /7

குரு பெயற்சியால் கடக ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இருக்காது, கணவன் - மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.

5 /7

குரு பெயர்ச்சியாக சிம்ம ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். வைர, தங்க ஆபரணங்களை வாங்குவீர்கள். சொந்த வீடு வாங்கலாம். உழைப்புக்கு ஏற்ப பலன் கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.

6 /7

குரு பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களுக்கு திருமணம் யோகம் உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கலாம். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். பதவி உயர்வு உங்களை தானாகவே தேடி வரும்.

7 /7

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.