12 ஆண்டுக்கு பிறகு குரு சுக்கிரன் சேர்க்கை, இந்த ராசிகளுக்கு ராஜ குபேர யோகம்

குருவும் சுக்கிரனும் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மேஷ ராசியில் ஒன்றாகப் பயணிக்க உள்ளனர். 12 ஆண்டுகளுக்குப் பிறகு குரு மற்றும் சுக்கிரனின் இந்த சுப அம்சம் மிகவும் சிறப்பாக இருக்கும். மேஷம் உள்ளிட்ட சில ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வாய்ப்புகள் கிடைப்பதுடன், பணம், சொத்துக்களைப் பெறுவதற்கான பாதையும் திறக்கும். எந்த 4 ராசிக்காரர்களுக்கு குரு மற்றும் சுக்கிரன் இணைவது பலன் தரும் என்பதை தெரிந்து கொள்வோம்.

மேஷ ராசியில் குரு மற்றும் சுக்கிரன் சேர்க்கை முக்கியமானதாகக் கருதப்படுகிறது, ஏனெனில், 12 ஆண்டுகளுக்குப் பிறகு, இரு கிரகமும் மேஷத்தில் ஒன்றாக இணையயுள்ளனர். குருவுடன் சுக்கிர பகவான் ஏப்ரல் 24ம் தேதி சேர உள்ளார்.  இதன் காரணமாக சில ராசியினருக்கு பணம், சொத்துக்கள் சேர வாய்ப்புகள் உண்டாகும். இந்த இரு சுப கிரகங்களின் சேர்க்கை சில ராசியினருக்கு திருமண யோகத்தை தர உள்ளது.

 

1 /6

மேஷம்: சுக்கிரன் மற்றும் குரு சேர்க்கை மேஷ ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும். சமூக கௌரவத்தை அதிகரிக்கும் மற்றும் நிதி நன்மைகளை கொண்டு வரும். இந்த காலம் வியாபாரிகளுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். தொழில் முன்னேற்றம் ஏற்படும். மேலதிகாரிகளிடமிருந்து அங்கீகாரம் மற்றும் முக்கியமான பொறுப்புகளை ஏற்கும் வாய்ப்பும் கூட எதிர்பார்க்கலாம்.

2 /6

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு, பதினொன்றாம் வீட்டில் சுக்கிரனும் குருவும் இணைவதால், முன்பை விட இப்போது சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். மேலும் தொழில் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும். உயர் அதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைக்கும். காதல் வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும்.

3 /6

கடகம்: குரு - சுக்கிரன் சேர்க்கையால் உங்களுக்கு வெற்றிக்கான பாதை திறக்கும். பல்வேறு துறைகளில் நல்ல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உங்களின் சமூக கௌரவம் அதிகரிக்கும். பணியிடத்தில் முழு ஆதரவைப் பெறுவீர்கள். சில நல்ல செய்திகளையும் பெறலாம். உங்களின் நெருங்கிய நண்பர் ஒருவரிடமிருந்து வேலையிலும் முழு ஆதரவைப் பெறுவீர்கள்.

4 /6

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு குரு மற்றும் சுக்கிரனின் சேர்க்கை ஏழாவது வீட்டில் இருக்கப் போகிறது. திருமண வாழ்க்கைக்கு இனிமையாக இருக்கும். இந்தக் காலகட்டத்தில் கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். இந்த ராசிக்காரர்கள் புதிய வேலை தேடிக்கொண்டிருந்தால், இந்தக் காலத்தில் புதிய வேலை கிடைக்கும்.

5 /6

மீனம்: குரு மற்றும் சுக்கிரனின் சேர்க்கை உங்களுக்கு நன்மை பயக்கும். ஏனெனில் இந்த சேர்க்கை பணம் மற்றும் பேச்சு ஸ்தானத்தில் நடக்கப் போகிறது. எனவே, இந்த நேரத்தில் நீங்கள் எதிர்பாராத பண வரவைப் பெறுவீர்கள். இந்தக் காலத்தில் வாகனம் போன்றவற்றை வாங்கலாம். 

6 /6

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.