இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹருக்கும் ஜெயா பரத்வாஜுக்கும் ஆக்ராவில் புதன்கிழமை (ஜூன் 1) திருமணம் நடைபெற்றது.
ஆக்ராவில் நடைபெற்ற தீபக் சாஹர் - ஜெயா பரத்வாஜ் ஆகியோரின் பிரமாண்ட திருமண விழாவின் சில புகைப்படங்கள்...
நேற்று ஜூன் 1, 2022 அன்று ஆக்ராவில் தீபக் சாஹர் - ஜெயா திருமணம் நடைபெற்றது. இந்த ஜோடியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஜூன் 3 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும்.
ஐபிஎல் 2021 இல், CSK vs PBKS போட்டிக்குப் பிறகு தீபக் சாஹர் முழங்காலில் நின்று, துபாய் ஸ்டேடியத்தில் ஜெயா பரத்வாஜிடம் தனது காதாலை முன்மொழிந்தார். (ஆதாரம்: ட்விட்டர்)
தீபக் சாஹர் திருமணத்தில் விராட் கோலி, தோனி மற்றும் ரோகித்சர்மா உள்ளிட்ட இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.
ஆக்ராவின் புகழ்பெற்ற சுதிர் இசைக்குழுவினர் சாஹரின் திருமணத்தில் இசை நிகழ்ச்சி நடத்தினார்கள் (Source: Twitter)
தீபக் சாஹர் 2021 ஆம் ஆண்டில் தனது தோழியான ஜெயா பரத்வாஜை தனது டீம் இந்தியா சகாக்களுக்கு அறிமுகப்படுத்தினார். (ஆதாரம்: ட்விட்டர்)
ஜெய பரத்வாஜ் இந்தி பிக் பாஸ் 5 போட்டியாளர் சித்தார்த் பரத்வாஜின் சகோதரி ஆவார். ஜெயாவும் தீபக் சாஹரும் ஒரு வருடத்திற்கும் மேலாக டேட்டிங் செய்து வந்தனர். (ஆதாரம்: ட்விட்டர்)