தோனிக்கு 7 போல்... KGF யாஷின் ராசியான நம்பர் என்ன தெரியுமா?

KGF பட புகழ் ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும் அடுத்த படம்  "டாக்சிக் -  எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்"  படத்தின் படப்பிடிப்பு, பெங்களூரில் வரும் 8 ஆகஸ்ட் முதல் துவங்குகிறது.

  • Aug 07, 2024, 17:48 PM IST

இந்நிலையில், யாஷின் ராசியான எண் (Yash Lucky Number) குறித்த தகவலும் வெளியாகி உள்ளது. 

 

 

1 /8

கன்னட நடிகரும், தயாரிப்பாளருமான யாஷ் சமீபத்தில் தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா மற்றும் அவரது குடும்பத்தினருடன் கர்நாடகாவில் உள்ள பல கோயில்களுக்குச் சென்றிருந்தார்.   

2 /8

ஒருநாளில் அவர்கள் ஸ்ரீ சதாசிவ ருத்ர சூர்யா கோயில், தர்மஸ்தலாவில் உள்ள ஸ்ரீ மஞ்சுநாதேஸ்வரர் கோயில் மற்றும் கர்நாடகாவில் உள்ள சுப்ரமண்யாவில் உள்ள குக்கே சுப்ரமண்யா கோயில் என பல கோயில்களில் வழிபாடு செய்தனர்.  

3 /8

அதாவது, யாஷின் இந்த கோயில் சுற்றுப்பயணம் என்பது ரசிகர்களை குதூகலத்தில் ஆழ்த்தியுள்ளது. எந்தவொரு புதிய திரைப்படத்தின் வேலையை தொடங்குவதற்கு முன்பாக, கோயில்களுக்குச் செல்வது யாஷின் வழக்கமாகும்.   

4 /8

எனவே, தற்போது யாஷ் கோயில், கோயிலாக செல்வதை கண்டு ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை சமூக வலைதளங்களில் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், யாஷின் அடுத்த திரைப்படத்தை தயாரிக்கும் படக்குழுவானது படம் குறித்த அப்டேட்டை தெரிவித்துள்ளது.   

5 /8

படம் ஜனவரியில் அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் படப்பிடிப்பு குறித்து அப்டேட் இல்லாமல் இருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.   

6 /8

யாஷ் நடிப்பில் கீது மோகன்தாஸ் இயக்கும் இப்படம் 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி அன்று பெங்களூரில் தொடங்க உள்ளது. அதாவது, வருடத்தின் 8ஆம் மாதத்தின் 8ஆம் நாள் அன்று இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. மேலும், இந்த வருடத்தின் கூட்டுத்தொகையும் 2+0+2+4 = 8 ஆகும்.   

7 /8

எனவே, 8-8-8 என்ற நியூமராலஜியின்படி இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. யாஷுக்கு ராசியான நம்பரான 8 என்பது குறிப்பிடதக்கது. மேலும் இது அவரது பிறந்த  தேதியுடன் பொருந்தி போகிறது.   

8 /8

கடந்த ஜனவரி மாதம் அவர் பிறந்த நாளில்தான்,  'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்' (Toxic: A Fairy Tale For Grown-ups) படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.