சனி பெயர்ச்சி 2025: இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம், அருள் மழை பொழிவார் சனி

Sani Peyarci Palangal: மார்ச் மாதம் சனி பெயர்ச்சி நடக்கவுள்ளது. இதனால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Sani Peyarci Palangal: மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவான் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். அவர் அனைத்து ராசிகளிலும் அதிக நாட்களுக்கு இருப்பதால், அவரது தாக்கமும் ராசிகளில் அதிகமாக இருக்கும். அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக உள்ள சனி பகவான் தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் உள்ளார். மார்ச் மாதம் அவர் குரு பகவானின் ராசியான மீன ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். மீனத்தில் சனி பெயர்ச்சி 2025 ஆம் ஆண்டின் மிக முக்கிய ஜோதிட நிகழ்வாக கருதப்படுகின்றது. சனி பெயர்ச்சியால் அமோகமான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

 

1 /11

அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. சனி பகவான் சுமார் இரண்டை ஆண்டுகளுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுகிறார். இந்த ஆண்டும் சனி பெயர்ச்சி நடைபெறும்.  

2 /11

தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் உள்ள சனி பகவான் 29 மார்ச் 2025 அன்று குருவின் ராசியான மீன ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். சனி பெயர்ச்சி இந்த ஆண்டின் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. சுமார் இரண்டரை வருடங்களுக்கு பிறகு கும்ப ராசியில் இருந்து மீன ராசியில் சனி பிரவேசிப்பார்.

3 /11

மார்ச் மாதம் நடக்கவுள்ள சனி பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும். இவர்களுக்கு சனி அருள் பரிபூரணமாக கிடைக்கும். வாழ்வில் பல வித வெற்றிகளை காண்பார்கள். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

4 /11

மேஷம்: குருவின் ராசியில் நடக்கவுள்ள சனி பெயர்ச்சி மேஷ ராசியினருக்கு லாபகரமானதாக இருக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். வீடு வாங்கும் யோகம் உள்ளது. செல்வம் பெருக வாய்ப்புகள் உண்டாகும். அலுவலக பணிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும், குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். வியாபாரிகள் வியாபாரத்தில் லாபம் பெறலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.

5 /11

மிதுனம்: மிதுன ராசியினருக்கு 2025ம் ஆண்டு சிறப்பானதாக இருக்கும். அலுவலக பணிகளில் உள்ளவர்களுக்கும் வியாபாரிகளுக்கும் நல்ல காலமாக இது இருக்கும். வேலையில் முன்னேற்றம் கூடும். சம்பளம் கூடும். புதிய வர்த்தகம் தொடங்க வாய்ப்புள்ளது. கணவன்-மனைவி இடையே உறவு மேம்படும். நிதி ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வெற்றி பெற புதிய வாய்ப்புகள் அமையும்.

6 /11

மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சியால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். குருவின் ராசியில் சனி நுழைவது அனைத்து பணிகளிலும் வெற்றியை அளிக்கும். புத்தாண்டில் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். நம்பிக்கை அதிகரிக்கும். புதிய வேலையைத் தொடங்க நல்ல நேரமாக இது இருக்கும். முதலீடுகள் மிகவும் லாபகரமாக இருக்கும். நிதி நிலை வலுவாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.

7 /11

கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சியால் அதிக நன்மைகள் உண்டாகும். சொத்து, வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். வேலையை மாற்றும் என்ணம் கொண்டுள்ளவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அலுவலக பணிகளில் ஊதிய உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு இது நல்ல காலமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. குழந்தைகளால் நல்ல செய்தியள் கிடைக்கும்.

8 /11

பொதுவாக சனி பகவானை கண்டு மக்கள் அச்சம் கொள்வதுண்டு. ஆனால், அது அவசியம் இல்லை. மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ற பலன்களையே சனி பகவான் அளிக்கிறார். அவரது சபையில் தர்மத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது, இதனால் அவர் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார்.

9 /11

மற்றவர்களுக்கு உதவு செய்யும் நபர்களை சனி பகவான் காத்து ரஷிக்கிறார். குறிப்பாக ஏழை எளியவர்களுக்கு, உணவு, உடை, குழந்தைகளுக்கு கல்விச் செலவுகளில் உதவுதல் ஆகியவற்றை செய்யும் நபர்களை சனி பகவான் சோதிப்பதில்லை.

10 /11

சனி பகவானின் பரிபூரண அருள் பெற, “ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் ஷக் சனைச்சராய நமஹ” என்ற சனி மூல மந்திரத்தை ஜபிப்பதும் நல்ல பலன்களை அளிக்கும். மேலும், 'நீலாஞ்ஜன ஸமாபாஸம், ரவிபுத்ரம் யமாக்ரஜம்; ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம், தம் நமாமி சனைச்சரம்' என்ற ஸ்தோத்திரத்தையும் தினமும் கூறலாம்.

11 /11

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.