இயக்குனர் கௌதம் மேனனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

GVM Net Worth: இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் சமீபத்தில் தனது 51வது பிறந்தநாளை கொண்டாடினார். மார்ச் 1ம் தேதி ஜோஸ்வா படம் வெளியாக உள்ளது.

1 /5

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் காதல் படங்கள் எடுப்பதில் புகழ் பெற்றவர். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.  

2 /5

மின்சார கனவு படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய கௌதம் மேனன் மின்னலே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.  இந்த படத்தில் மாதவன், ரீமா சென் ஆகியோர் நடித்து இருந்தனர்.  

3 /5

இந்த படத்திற்கு பிறகு காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்தார்.  பின்பு, சிம்பு மற்றும் த்ரிஷாவை வைத்து விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை எடுத்தார். இது ஒரு ட்ரெண்டு செட்டராக மாறியது.    

4 /5

கவுதம் மேனன் இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று பலருக்கும் ஆசை உள்ளது. இவரது இயக்கத்தில் உருவாகி நீண்ட நாட்களாக வெளிவராமல் இருக்கும் துருவ நட்சத்திரம் விரைவில் வெளியாக உள்ளது.  

5 /5

தற்போது படங்களில் நடித்தும் வருகிறார் கவுதம் மேனன்.  சென்னை, கேரளா என நிறைய இடங்களில் இவருக்கு சொத்து உள்ளது.  கிட்டத்தட்ட 30 கோடிக்கும் மேல் சொத்து இருக்கும் என்று கூறப்படுகிறது.