அருண் விஜய்க்கு இவ்ளோ பெரிய பொண்ணா? வைரலாகும் புகைப்படம்!

Actor Arun Vijay Daughter Purvi : கோலிவுட்டில் முக்கிய நடிகராக வலம் வருபவர், அருண் விஜய். இவரது மகள் பூர்வியின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Actor Arun Vijay Daughter Purvi : நடிகர் விஜயகுமாரின் மகன் அருண் விஜய், தமிழ் திரையுலகில் முக்கிய நடிகர்களுள் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த ஆண்டின் கிறிஸ்துமஸ் பண்டிகையை பிரபலங்கள் உள்ளிட்ட பலர் விமர்சையாக கொண்டாடினர். இதையடுத்து, அருண் விஜய் தனது குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதில், அவரது மகளை பார்த்த ரசிகர்கள், இவருக்கு இவ்வளவு பெரிய பொண்ணா என குழம்பிப்போய் இருக்கின்றனர். 

1 /7

தமிழில் பிரபல நடிகராக வலம் வரும் அருண் விஜய், திரையுலகிற்கு வந்த ஆரம்பத்தில் ஹீரோவாக நடித்து வந்தார். அவரது படங்கள் இடையில் சரியாக ஓடாமல் போனதை அடுத்து, என்னை அறிந்தால் படம் மூலம் வில்லனாக அவதாரம் எடுத்தார். இதையடுத்து அவர் நடித்த தடம், குற்றம் 23 உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. 

2 /7

அருண் விஜய்க்கும் ஆர்த்தி என்பவருக்கும் 2006ஆம் ஆண்டு திருமணம் நடைப்பெற்றது. இவர்களுக்கு பூர்வி மற்றும் அர்ணவ் என இரு பிள்ளைகள் உள்ளனர். 

3 /7

அருண் விஜய், சமீபத்தில் வணங்கான் படத்தில் நடித்திருந்தார். பாலா இயக்கத்தில் உருவான இந்த படம், அடுத்த ஆண்டில் வெளியாக உள்ளது. 

4 /7

ஊரெங்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி,  நடிகர் அருண் விஜய்யும் தனது குடும்பத்தினருடன் இப்பண்டிகையை கொண்டாடி இருக்கிறார். 

5 /7

அருண் விஜய், தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்தை தெரிவித்திருந்தார். 

6 /7

இந்த புகைப்படத்தில் இடம் பெற்றிருந்த அருண் விஜய்யின் மகளை பார்த்த ரசிகர்கள், “அருண் விஜய்க்கு இவ்ளோ பெரிய பொண்ணா?” என்று ஆச்சரியத்தில் உள்ளனர். 

7 /7

அருண் விஜய் பார்ப்பதற்கு இளமையாக இருப்பதால், அவருக்கு இவ்வளவு பெரிய பெண் இருப்பதை நம்ப முடியவில்லை என சிலர் தெரிவித்து வருகின்றனர்.