தீபாவளி நாளில் வெண் பூசணி திருஷ்டி கழித்தால் அமோக பலன் நிச்சயம்..!

Diwali White pumpkin drishti | தீபாவளி நாளில் வெண் பூசணி திருஷ்டி எடுத்தால் குடும்பத்துக்கு என்னென்ன செல்வங்களும், நன்மைகளும் கிடைக்கும் என தெரிந்து கொள்ளுங்கள்.

பொதுவாக வீட்டில் திருஷ்டி எடுக்கும் பழக்கம் இருந்தால் தீபாவளி நாளில் வெண் பூசணி திருஷ்டி எடுத்தால் குடும்பத்துக்கு கிடைக்கும் யோக பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்.

1 /8

வெண் பூசணி திருஷ்டியை எல்லோரும் கேள்விபட்டிருப்பீர்கள். புதுவீடு கட்டும்போது மிகப்பெரிய வெண் பூசணியை கட்டடத்துக்கு முன்பாக கட்டி தொங்க விடுவார்கள். அந்த பூசணி கட்டட பணிகள் நிறைவடையும் வரை மெதுமெதுவாக நொந்து உருகி காய்ந்துவிழும்.

2 /8

ஒருவேளை கட்டட பணிகள் முடியாவிட்டால் வேறு பூசணிக்காயையும் கட்டி தொங்க விடுவார்கள். காரணம், புது கட்டடத்துக்கு வரும் கண் திருஷ்டிகள் எல்லாம் பூசணிக்காயில் இறங்கி புது வீட்டுக்கும், குடும்பத்தாருக்கும் ஏதும் ஆகாது என்பது நம்பிக்கை. 

3 /8

அதேபோல் புது வாகனம் வாங்கும்போது பெரிய வெண் பூசணி வாங்கி வந்து தீப ஆராதனை எல்லாம் காண்பித்து வாகனத்தை சுற்றி திருஷ்டி எடுத்து சாலையில் போட்டு உடைப்பார்கள். அடுமட்டுமல்லாமல், ஆயுத பூஜையின்போது தொழிற்சாலைகள், தறி பட்டறைகள் என எல்லா இடங்களிலும் பெரிய வெண் பூசணி திருஷ்டியை கழிப்பதை பார்த்திருக்க கூடும்.

4 /8

காரணம், திருஷ்டி ஆபத்து எவ்வளவு பெரியதாக இருந்தாலும் வெண் பூசணி தாங்கிக் கொண்டு, செல்வத்தையும் யோகத்தையும் கொடுக்கும் என்பது எல்லோருக்கும் இருக்கும் நம்பிக்கை. 

5 /8

அந்த வெண் பூசணிக்காயில் ஆண்டுக்கு ஒருமுறை வீட்டிற்கும் திருஷ்டி கழிப்பது அமோக பலன்களை கொடுக்கும். அதுவும் தீபாவளி திருநாளில் எடுக்கும் வெண் பூசணி திருஷ்டிக்கு மிகப்பெரிய பலன்கள் இருகின்றன.

6 /8

ஏனென்றால் தீபாவளி நாளில் தான் குடும்பத்தோடு ஒன்றாக இருப்பீர்கள். எல்லோரும் எண்ணெய் குளியல் போட்டு லக்ஷ்மி தேவி வழிபாடு செய்திருப்பீர்கள். மகிழ்ச்சியும் கொண்டாட்டமுமாக இருக்கும் உங்கள் வீட்டை பார்க்கும்போது திருஷ்டியும் அதிகமாகவே இருக்கும்.   

7 /8

அதனால் இந்த சந்தர்பத்தில் காலை வழிபாடு முடித்தவுடன் அல்லது இரவு நேரத்தில் எல்லோரும் உறங்க செல்வதற்கு முன்பாக குடும்பத்தோடு ஒன்றாக இருந்து வெண் பூசணி திருஷ்டி எடுத்துக் கொள்ளுங்கள்.  

8 /8

இந்த திருஷ்டி எடுத்த பிறகு இந்த ஆண்டு முழுவதும் தேக ஆரோக்கியத்துன் செல்வ செழிப்போடு இருப்பீர்கள். குடும்பத்தாருக்கு எந்த ஆரோக்கிய பிரச்சனைகளும் வராது. கடன் பிரச்சனைகளுக்கு வழி பிறக்கும். புதிய தொழில், வருமானத்துக்கான புதிய வழி எல்லாம் உங்களை வந்து சேரும். அதனால் வரும் தீபாவளி நாளில் வெண் பூசணி திருஷ்டி எடுக்க மறந்துவிடாதீர்கள்.