நாவல் பழத்துடன் இதையெல்லாம் கண்டிப்பா சாப்பிடாதீங்க!!

Jamun Side Effects: நாவல் பழம் பலருக்கு பிடித்தமான, உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளிக்கொடுக்கும் பழமாகும். இந்த பழம் சாப்பிட சுவையாக இருப்பதுடன், உடலுக்கு தேவையான பல நல்ல ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. இந்த பழத்தை சாப்பிட்டால் வாய் முழுவதும் ஊதா நிறமாக மாறும். இந்த காரனத்தினால், இந்த பழத்தை ஊதா பழம் என்றும் அழைப்பதுண்டு. 

நாவல் பழத்தில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இருப்பினும், இந்த பழத்தை சாப்பிடும் போது கவனமாக இருக்க வேண்டும். நாவல் பழத்தை சிலவற்றுடன் உட்கொள்ளக்கூடாது. அவற்றைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 

1 /5

நாவல் பழம் பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும், அதில் சத்துக்கள் அதிகமாக உள்ளன. இதை உட்கொண்டால் உடலுக்கு இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், மெக்னீசியம், வைட்டமின் பி, வைட்டமின் சி போன்றவை அதிகமாகக் கிடைக்கும்.  

2 /5

நாவல் பழம் ஆரோக்கியத்தின் சுரங்கமாகும். ஊதா பழம் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும், இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், பற்களை சுத்தம் செய்யவும், ஈறுகளில் இரத்தம் கசிவதை தடுக்கவும், எடையை குறைக்கவும் உதவுகிறது. ஆனால் இந்த பழத்துடன் 3 பொருட்களை உட்கொள்ளக்கூடாது.  

3 /5

மஞ்சள் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. ஆனால் நாவல் பழத்துடன் ஒருபோதும் இதை உட்கொள்ளக்கூடாது. இந்த இரண்டு பொருட்களும் ஒன்றோடொன்று சேர்ந்தால் நச்சுத்தன்மை உருவாகும். இது வயிற்று வலி மற்றும் ஒவ்வாமைக்கு வழிவகுக்கும்.

4 /5

நாவல் பழத்தை பால் அல்லது பால் பொருட்களுடன் சாப்பிடக்கூடாது. பாலையும் ஊதாப் பழத்தையும் ஒன்றாகச் சாப்பிட்டால் அஜீரணம், வாயுத்தொல்லை, வயிற்று வலி போன்றவை ஏற்படும். இந்த காரணத்திற்காக நாவல் பழத்தை சாப்பிடுவதற்கு முன் அல்லது பினர் உடனடியாக பால் குடிக்கக்கூடாது.

5 /5

ஊறுகாய் சாப்பிடுவதால் உணவின் சுவை அதிகரிக்கும். எனினும், நாவல் பழத்தை சாப்பிடுவதற்கு முன்போ அல்லது பின்னரோ ஊறுகாயை சாப்பிடுவதால் வாந்தி, வாயுத்தொல்லை மற்றும் நெஞ்செரிச்சல் போன்றவை ஏற்படும்.  (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)