நம்மை வியப்பில் ஆழ்த்தும் உலகின் 7 இயற்கை அதிசயங்கள்..!

மனிதர்களை மேய் சிலிர்க்க வைக்கும் உலகின் 7 இயற்கை அதிசயங்களின் புகைப்படத் தொகுப்பு..!

Image credit: Instagram/@mounteverestofficial

எவரெஸ்ட் சிகரம்.  தங்கத்தை கொட்டியது போல் மின்னும் இந்த தோற்றம்  5500 மீ / 18,500 அடிக்கு மேல் உள்ள காலா பத்தர் என்னும் இடத்தின் உச்சியில் இருந்து  பார்க்கும் போது தென்படும் தோற்றம். இது உலகின் மிக உயர்ந்த மலை என்று அழைக்கப்படுகிறது.

1 /6

Image credit: Instagram/@johnny_gaskell கிரேட் பேரியர் ரீஃப் என்பது உலகின் மிகப்பெரிய பவளப்பாறை அமைப்பாகும், இது 2,900 க்கும் மேற்பட்ட தனிப்பட்ட திட்டுகள் மற்றும் 900 தீவுகளைக் கொண்டது, இது சுமார் 344,400 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 2,300 கிலோமீட்டருக்கும் அதிகமாக உள்ளது.

2 /6

Image credit: Instagram/@matetsivictoriafalls விக்டோரியா நீர்வீழ்ச்சி என்பது தென்னாப்பிரிக்காவின் ஜாம்பேசி ஆற்றின் நீர்வீழ்ச்சியாகும், இது ஜாம்பியாவிற்கும் ஜிம்பாப்வேவுக்கும் இடையிலான எல்லையில் அமைந்துள்ளது. 1,708 மீட்டர் அகலத்தில் இருப்பதால் இது உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

3 /6

Image credit: Instagram/@naturalwonderstours ரியோ டி ஜெனிரோ துறைமுகம் பிரேசிலில் அமைந்துள்ளது. அட்லாண்டிக் பெருங்கடலில் அரிப்பு ஏற்பட்டதால் உருவானது. இந்த துறைமுகம் அழகிய கிரானைட் மலைகளால் சூழப்பட்டுள்ளது.

4 /6

Northern Lights/ துருவ ஒளி Image credit: Instagram/@northern.lights.norway அரோரா துருவி ஒளி அல்லது Aurora or northern polar lights என்றும் அழைக்கப்படும் வடக்கு விளக்குகள் இயற்கையான ஒளி காட்சி ஆகும், இது முக்கியமாக உயர் அட்சரேகை பகுதிகளில் (ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிக்கைச் சுற்றி) காணப்படுகிறது.

5 /6

Image credit: Instagram/@grandcanyonnps கிராண்ட் கேன்யன்/Grand Canyon கிராண்ட் கேன்யன் என்பது அமெரிக்காவின் அரிசோனாவில் உள்ள கொலராடோ நதியினால் உண்டான மாபெரும் செங்குத்து பள்ளத்தாக்கு ஆகும். இது 277 மைல் (446 கி.மீ) நீளமும், 18 மைல் (29 கி.மீ) அகலமும், ஒரு மைல் ஆழத்தையும் கொண்டது.

6 /6

Image credit: Instagram/@david.corn.sh Parícutin பராகுடின் அல்லது வோல்கான் டி பராகுடின் என்பது மெக்ஸிகன் மாநிலமான மைக்கோவாகன் அருகில் உள்ள எரிமலை ஆகும். மெக்ஸிகோ நகரத்திற்கு மேற்கே 322 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த எரிமலை கூம்பு வடிவ எரிமலை என்பது குறிப்பிடத்தக்கது.