ஆசையோடு நாம் வாங்கி சாப்பிடும் ஐஸ்கிரீமுடன் வந்துசேரும் புதிய நோய்கள்!!!

ஐஸ்கிரீம் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குஷியாகி விடுவார்கள். அனைத்து வயதினரும் விரும்பி உண்ணும் ஒரு பண்டம் ஐஸ்கிரீம். அதிலும் கோடை காலத்தில் ஐஸ்கிரீம் அதிகமாக விரும்பப்படுகிறது. ஆனால் உண்மையில் ஐஸ்கிரீம் சாப்பிடுவதினால் ஏற்படும் தீமைகளை பற்றி நாம் சிந்தித்து பார்த்ததுண்டா???

  • Oct 20, 2020, 14:07 PM IST

உங்களை யோசிக்க வைப்பதற்காகவே இந்த பதிவு. கொரோனா வைரஸ் காரணமாக நம் ஆரோக்கியம் மீது அதிக அக்கறை செலுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் அனைவரும் இருக்கின்றோம். குறிப்பாக குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் இடத்தில் அதிக கவனம் தேவை. கோடை காலமோ அல்லது குளிர் காலமோ, எதுவாக இருந்தாலும் குளிரூட்டப்பட்ட ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் என்றுமே நமக்கு நன்மை நேராது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதற்கு காரணமாக இருப்பது ஐஸ்கிரீமில் சேர்க்கப்படும் பொருட்கள் தான்.

1 /10

ஐஸ்கிரீம் தயாரிக்க முதன்மை பொருட்களாக இருப்பது பால், பால் கிரீம் பவுடர், எசன்ஸ், சர்க்கரை மற்றும் வேறு சில மூலப்பொருட்கள் ஆகும். விஷயம் என்னவென்றால் ஐஸ்கிரீம் தயாரிக்கும் போது பாலானது சரி பாதி அளவு சேர்க்கப்பட வேண்டும் என்பது தான் விதி. 

2 /10

ஆனால் சொல்லவா வேண்டும், ஐஸ்கிரீம் தயாரிக்கும் நிறுவனங்கள் இதை கடைப்பிடிப்பதே இல்லை. நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் ஆஸ்துமா போன்ற நோய்கள் இருப்பவர்கள் ஐஸ்கிரீம் சாப்பிடும் போது அவர்களது நோயானது தீவிரமாகிறது. 

3 /10

அதிலும் குறிப்பாக ஆஸ்துமா நோயாளிகள் ஆசைப்பட்டு சிறிதளவு ஐஸ்கிரீம் சாப்பிட்டு விட்டால் அவ்வளவு தான். அவர்களின் உடலில் வெப்ப நிலை மாற்றம் ஏற்பட்டு, அதிக சிரமத்திற்கு ஆளாகி விடுவார்கள். 

4 /10

அதே போல அடிக்கடி தலைவலியினால் அவதிப்படுபவர்களும் ஐஸ்கிரீமை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் தலைவலியானது அதிகரிக்கக் கூடும். 

5 /10

ஐஸ்கிரீமின் மிகவும் ஆபத்தான பொருளானது நிறத்திற்காக அதில் சேர்க்கப்படும் பொருட்களே ஆகும். 

6 /10

பார்த்த உடன் சாப்பிட தூண்டும் வகையில் நம்மை கவர்வதற்காக இப்பொருட்கள் சேர்க்கப்படுகிறது. ஒவ்வொரு வகையான ஐஸ்கிரீம்களிலும், ஒவ்வொரு விதமான நிறப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. 

7 /10

ஐஸ்கிரீமை நாம் சாப்பிடும் போது நமது பற்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுகிறது.

8 /10

எனவே கடைகளில் விற்கப்படும் ஐஸ்கிரீமினால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை அறிந்தீர்கள் அல்லவா…. இனியாவது சுதாரித்து கொள்ளுங்கள். 

9 /10

ஆகையால் இனி வீட்டிலே ஐஸ்கிரீம் செய்து, குழந்தைகளையும் குஷிப்படுத்தலாம், ஆரோக்கியத்தையும் கவனித்து கொள்ளலாம். 

10 /10

ஆகையால் இனி வீட்டிலே ஐஸ்கிரீம் செய்து, குழந்தைகளையும் குஷிப்படுத்தலாம், ஆரோக்கியத்தையும் கவனித்து கொள்ளலாம்.