தினமும் காலையில் ஒரு கிளாஸ் கீரை ஜூஸ் குடிங்க.. ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்

Spinach Juice Health Benefits: பசலைக் கீரை டயட் பிரியர்களின் விருப்பமான கீரையாகும். இதில் கிடைக்கும் எண்ணற்ற சத்துக்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுக்கின்றன. அவ்வாறு பசலைக்கீரையை ஜூஸாக் அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன பார்க்கலாம்.

 

தினமும் பச்சைக் காய்கறிகளை சாப்பிட்டால், உடலில் சேரும் அழுக்குகள் எளிதாக வெளியேறும். அதிலும் பசலைக்கீரையை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் உடல் எடை எளிதாக குறையத் தொடங்கும். இந்நிலையில் தினமும் வெறும் வயிற்றில் பசலைக்கீரை ஜூஸ் குடித்து வந்தால் உடலில் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

1 /7

உடல் எடையை குறையும்: பசலைக்கீரையில் குறைந்த அளவு கலோரிகள் உள்ளதாக, இந்த ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தால் ஒரே மாதத்தில் உடல் எடை குறையத் தொடங்கும்.

2 /7

எலும்பு வலிமை: வெறும் வயிற்றில் பசலைக்கீரை ஜூஸ் குடித்தால், உடலை வலுவாக வைத்திருக்கலாம். மேலும் கீரையில் வைட்டமின் கே சத்து இருப்பதால் எலும்பு வலிமைக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும்.

3 /7

வெறும் வயிற்றில் பசலைக்கீரை ஜூஸ் குடித்து வந்தால் கண் ஆரோக்கியமாக இருக்கும். அதுமட்டுமின்றி இதில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கண்களை கூர்மையாக்க உதவும். மேலும் கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது. 

4 /7

வயிற்றை சுத்தம் செய்யும்: வயிற்று புண்னை ஆற்றுவதில் பசலைக்கீரை சிறந்த மருந்தாகும். அதுமட்டுமன்றி வயிற்றை சுத்தம் செய்ய இந்த ஜூஸை தினமும் வெறும் வயிற்றில் குடித்து வரலாம், இவை செரிமானத்தை சீராக்க உதவும்.

5 /7

சரும ஆரோக்கியம்: முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகள் நீங்கள் இந்த ஜூஸை உட்கொள்ள வேண்டும். இவை முகத்தை பளபளக்க உதவும். அதுமட்டுமன்றி ஃபிரீ ரேடிகல்களை எதிர்த்துப் போராடும் ஆற்றலையும் கொண்டுள்ளது.  

6 /7

ஊட்டச்சத்து நிறைந்தது: கீரையில் ஐயன், மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் ஏ, ஃபோலேட் மற்றும் பிற அத்தியாவசிய கூறுகள் இந்த கீரையில் உள்ளது, எனவே இவை ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாகும். எனவே இது உடலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

7 /7

பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.