DARK chocolate: சாக்லேட் சாப்பிட்டால் அது பல ஆரோக்கிய நன்மைகளைக் கொடுக்கிறது. கொக்கோ மரத்தின் விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் சாக்லேட், பதப்படுத்தப்பட்டு சர்க்கரை மற்றும் பிற பொருட்களுடன் சேர்க்கப்படுகிறது
ஆன்டிஆக்ஸிடன்ட்களால் நிரம்பியுள்ள டார்க் சாக்லேட், ஃப்ரீ ரேடிக்கல்கள் எனப்படும் தீங்கு விளைவிக்கும் மூலக்கூறுகளால் ஏற்படும் சேதத்திலிருந்து நமது செல்களைப் பாதுகாக்கிறது
சாக்லேட் உண்பது, நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்கிறது.
சாக்லேட் இரும்பு, தாமிரம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் கொண்டது சாக்லேட்
ஆரோக்கியமான இரத்த சிவப்பணுக்களுக்கு இரும்புச்சத்து அவசியம், இரும்பு உறிஞ்சுதலை ஆதரிக்கும் தாமிரம் மற்றும் மெக்னீசியம் உடல் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது
சாக்லேட்டில் உள்ள ஃபிளாவனாய்டுகள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதால், உடலில் இதய நோய்க்கான அபாயத்தை குறைக்கிறது. இருப்பினும், அதிக கலோரி மற்றும் அதிக சர்க்கரை உள்ளடக்கம் காரணமாக சாக்லேட்டை அளவுடன் சாப்பிடுவது நல்லது.
சாக்லேட்டில் உள்ள ஃபிளாவனால்கள் மேம்பட்ட அறிவாற்றல் செயல்பாட்டுக்கு காரணமாகின்றன. நினைவாற்றல், கவனம் மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன் ஆகியவற்றை சாக்லேட் மேம்படுத்தலாம். கூடுதலாக, சாக்லேட்டில் உள்ள காஃபின் மற்றும் புரோமின் அதிக கவனம் மற்றும் விழிப்புணர்வை மேம்படுத்தும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை