நோய் எதிர்ப்பு சக்தி

  • Jun 08, 2024, 00:02 AM IST
1 /9

இலவங்க பட்டையில், கார்போஹைட்ரேட், கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆகியவை ஏராளமாக உள்ள நிலையில் இலவங்கப்பட்டை பானத்தை தினமும் குடிப்பதால், நமக்கு கிடைக்கக்கூடிய ஆரோக்கிய நன்மைகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.

2 /9

ஆயுர்வேதத்தில், இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த இலவஙக்பட்டை உதவும் என கூறப்பட்டுள்ளது. உணவுக்கு சுவை சேர்க்கும் இந்த மசாலா, நீரிழிவு நோயாளிகளின் பசியை கடுப்படுத்துவது மட்டுமின்றி, இன்சுலினை தூண்டி அவர்களின் சுகர் லெலவலை எளிதில் கட்டுப்படுத்தவும் முடியும். 

3 /9

PCOS: இன்றைய காலகட்டத்தில் இளம் பெண்களுக்கு கூட PCOS என்னும் மாத விடாய் பிரச்சனை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பிசிஓஎஸ் ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்துகிறது. இதிலிருந்து விடுபட இலவங்க பட்டையை தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

4 /9

நினைவாற்றல்: தினமும் இலவங்கப்பட்டை நீரை தினமும் குடித்து வந்தால், நமது மூளை சிறப்பாக செயல்பட உதவும். இலவங்கப்பட்டை நமது செறிவுத்திறன் மற்றும் நினைவாற்றலை வலுப்படுத்த உதவுகிறது. இது தவிர, இதன் மூலம் அல்சைமர் நோயின் அபாயத்தையும் குறைக்கலாம்.  

5 /9

செரிமானம்: இலவங்கப்பட்டையில் செரிமானத்தை மேம்படுத்தும் பண்புகள் காணப்படுகின்றன.  தினமும் இலவங்கப்பட்டை தண்ணீரை குடிப்பதன் மூலம் வாயுத்தொல்லை, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் பெருமளவில் குணமாகும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

6 /9

நோய் எதிர்ப்பு சக்தி: இலவங்கப்பட்டையில் நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன. எனவே இதனை தினமும் அருந்துவதால், நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இதனால், சளி, இருமல், காய்ச்சல் போன்ற வைரஸ் நோய்களின் அபாயம் பெருமளவில் குறையும்.

7 /9

உடல் பருமன்: மெட்டபாலிஸம் என்னும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் ஆற்றல் கொண்ட இலவங்கபட்டை, உடல் பருமனை குறைக்க நினைப்பவர்களுக்கு அருமருந்தாக இருக்கும்.

8 /9

கொலஸ்ட்ரால்: இலவங்கப்பட்டை பானத்தை தொடர்ந்து குடித்து வந்தால் நரம்புகளில் சேர்ந்துள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவு பெருமளவு குறையும். இதனால் இரத்த அழுத்தம்  குறைந்து இதய ஆரோக்கியம் மேம்பட்டு மாரடைப்பு போன்ற கடுமையான நோய்களை வராமல் தடுக்கலாம்

9 /9

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)