மாம்பழம் சாப்பிட்ட பின் சாப்பிடக் கூடாத ‘சில’ உணவுகள்..!!

முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தின் சுவை பிடிக்காதவர்களே இல்லை எனலாம். அதே நேரத்தில் இதில் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்களும் உள்ளன. முக்கியமாக விட்டமின் சி, பெக்டின், நார்ச்சத்து, இரும்பு பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்களும் உள்ளன.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் மாம்பழத்தை பார்த்ததும் வாங்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டு விடும். இதில் பொஅல ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது எனினும், மாம்பழம் சாப்பிட்ட பின் சில உணவுகளை சாப்பிடுவதால், ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

1 /8

மாம்பழம் சாப்பிட்டவுடன் சில உணவு வகைகளையும் பானங்களையும் தவிர்க்க வேண்டும் என்று  ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். இதனால், செரிமானம் பிரச்சனை, இரத்த சர்க்கரை அளவு அதிகரித்தல் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படலாம் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

2 /8

பப்பாளி: மாம்பழம் சாப்பிட்ட பிறகு பப்பாளியை சாப்பிட வேண்டாம் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். இதனால்,  குமட்டல், வாந்தி மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவை ஏற்படக் கூடும் என்பதால், இந்த தவற்றை செய்யக் கூடாது. 

3 /8

குளிர் பானங்கள்: மாம்பழம் சாப்பிட்ட பிறகு குளிர் பானங்களை தவிர்க்கவும் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். மாம்பழம் சாப்பிட்ட பிறகு குளிர்பானம் குடிப்பது செரிமானத்தை சீர்குலைக்கும் என்பதோடு, ரத்த சர்க்கரை அளவும் மிகவும் அதிகரிக்கும்.

4 /8

தண்ணீர்: மாம்பழம் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பதையும் தவிர்க்க வேண்டும். மாம்பழம் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பது அஜீரணத்திற்கு வழிவகுக்கும் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

5 /8

தயிர்: மாம்பழம் சாப்பிட்ட உடன் தயிர் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். மாம்பழத்தை சாப்பிட்ட உடன் தயிர் சாப்பிடுவதால் சில வயிறு உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதாவது செரிமான பிரச்சினைகள் உள்பட குடல் பிரச்சினைகள் ஏற்படலாம்.

6 /8

பாகற்காய்: கசப்புத்தன்மை கொண்ட பாகற்காயில் நமது உடலுக்கு பல நன்மைகள் உள்ளது. ஆனாலும் மாம்பழம் சாப்பிட்ட உடன் இதை சாப்பிட்டால், செரிமானம் பாதிக்கப்பட்டு குமுட்டல் ஏற்படும்.

7 /8

கார உணவுகள்: மாம்பழம் சாப்பிட்ட உடன் அதிக காரமான உணவு வகைகளை சாப்பிடக்கூடாது.  மிகவும் காரமான உணவு பொருட்களை சாப்பிடுவதால் நெஞ்சு எரிச்சல், மலச்சிக்கல் போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.