ஒற்றைத் தலைவலி (Migraine)என்பது சாதாரண தலைவலியை விட மோசமானது. தீவிரமான தலைவலி, குமட்டல் போன்ற அறிகுறிகளைக் கொண்ட நரம்பியல் தொடர்பான ஒரு நோய் ஆகும்.
ஒற்றைத் தலைவலி ஒருவரின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் திறன் பெற்றது. இந்நிலையில், இதிலிருந்து விடுபட உதவும் உணவுகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
ஒற்றைத் தலைவலி பிரச்சனை வாழ்க்கையை முடக்கி போடும் திறன் கொண்டது. இதிலிருந்து விடுபட சேர்க்க வேண்டிய உணவுகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
பச்சை இலைக் காய்கறிகளில் அதிக அளவு ஆண்டி-ஆக்சிடெண்டுகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் உள்ள மெக்னீசியம் சத்து ஒற்றை தலைவலிக்கு தீர்வை அளிப்பதோடு, நல்ல மூளை ஆரோக்கியம் மற்றும் நரம்பு செயல்பாட்டை பராமரிக்க உதவுகிறது.
ஒமேகா 3 கொழுப்புடன் மீன் உணவு ஒற்றை தலைவலியைக் கட்டுப்படுத்த மிகவும் உதவும். அதோடு இவை எலும்புகளையும் வலுப்படுத்தும் திறன் கொண்டது.
ஒற்றை தலைவலியினால் அவதிப்படுபவர்கள், தலைக்கு புதினா எண்ணெயை கொண்டு மென்மையாக மசாஜ் செய்தால் தலை வலியிலிருந்து விரைவில் நிவாரணம் பெறலாம்.
தலைவலி இருந்தால், ஒரு கிளாஸ் எலுமிச்சை நீர் உட்கொள்வது மிகுந்த நிவாரணத்தை கொடுக்கும். மேலும் தலைவலியுடன் தொடர்புடைய குமட்டல் வாந்தி ஆகியவற்றையும் நீக்கும்.
பாதாம், வாதுமை பருப்பு, சியா விதைகள் போன்ற ஒமேகா கொழுப்பு அமிலங்கள் நிறைந்த நட்ஸ்கள் ஒற்றை தலைவலி ஏற்படாமல் தடுக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.