இந்தியாவில் தங்க இறக்குமதி 2021: இந்தியாவில் கடந்த மூன்று மாதங்களில் 140 டன் தங்கம் வாங்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பினால் நாடே துன்பத்திலும், துயரத்திலும் மூழ்கியிருந்தாலும், தங்கம் வாங்குவதில் மட்டும் இந்தியாவும் இந்தியர்களும் சளைக்கவில்லை. இந்தியாவில் தங்க தேவை, கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் அதாவது ஆண்டின் முதல் மூன்று மாதங்களுடன் ஒப்பிடும்பொது இந்த ஆண்டு 2021 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் 37 சதவீதம் வரை அதிகரித்து 140 டன்னாக உயர்ந்துள்ளது. உலக தங்க கவுன்சில் (WGC) இந்த தகவலை வெளியிட்டுள்ளதாக பி.டி.ஐ செய்தி முகமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Also Read | ஒளிப்பதிவாளர், இயக்குனர் கே.வி. ஆனந்த் மாரடைப்பால் மரணம்
மதிப்பு அடிப்படையில், தங்கத்திற்கான தேவை முதல் காலாண்டில் 57 சதவீதம் அதிகரித்து 58,800 கோடி ரூபாயாக உள்ளது. இது ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலாண்டில் ரூ .37,580 கோடியாக இருந்தது.
ஜனவரி-மார்ச் 2020 ஆம் ஆண்டில், தங்க நகைகளுக்கான மொத்த தேவை 39 சதவீதம் அதிகரித்து 102.5 டன்னாக அதிகரித்துள்ளது. சென்ற ஆண்டு இதன் மதிப்பு 73.9 டன்.
மதிப்பைப் பற்றி பேசினால், நகைகளுக்கான தேவை 58 சதவீதம் அதிகரித்து 43,100 கோடி ரூபாயாக இருந்தது, இதுவே கடந்த ஆண்டு 27,230 கோடி ரூபாயாக இருந்தது.
தங்கத்திற்கான முதலீட்டு தேவை கடந்த ஆண்டு 28.1 டன்னிலிருந்து 34 சதவீதம் அதிகரித்து 37.5 டன்னாக அதிகரித்துள்ளது. மறுபுறம், மதிப்பைப் பொறுத்தவரை, இது 53 சதவீதம் அதிகரித்து 15,780 கோடி ரூபாயாக இருந்தது.
WGC தரவுகளின்படி, 2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தங்கத்திற்கான மொத்த தேவை 102 டன்.