Keerthy Suresh Antony Thattil Wedding Photos : தென்னிந்திய திரையுலகின் முக்கிய நடிகராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர், இருமத முறைப்படி திருமணம் செய்திருக்கிறார்.
Keerthy Suresh Antony Thattil Wedding Photos : தென்னிந்தியாவின், பிரபல நடிகைகளுள் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமான இவர், இந்தியில் பேபி ஜான் படத்தில் நடித்து அறிமுகமாகியிருக்கிறார். இவருக்கு சமீபத்தில் கோவாவில் திருமணம் நடந்தது. இங்கு இவர் இரு மதங்களின் முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை கீர்த்தி சுரேஷ், தனது 15 வருட காதலரான ஆண்டனி தட்டிலை திருமணம் செய்திருக்கிறார். இவர்களின் திருமணம் கோவாவில் நடைப்பெற்றது.
கோவாவில் நடைப்பெற்ற திருமண நிகழ்வில், கீர்த்தி சுரேஷின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கீர்த்தியின் திருமணம், முதலில் தமிழ் இந்து முறைப்படி நடந்ததை தொடர்ந்து, இன்னொரு முறை கிறிஸ்தவ முறைப்படி நடந்திருக்கிறது.
படங்களில் காட்டுவது போல, ஒரு மேடையில் ஆண்டனியும் கீர்த்தியும் திருமண சத்தியங்களை பரிமாறிக்கொண்டு முத்தம் கொடுத்துக்கொண்ட போட்டோ வெளியாகியிருக்கிறது.
முன்னதாக, தமிழ் முறைப்படி, தந்தையின் மடி மீது அமர்ந்து ஆண்டனியின் கையால் தாலி கட்டிக்கொண்டார் கீர்த்தி. அப்போது அவர் எமோஷனல் ஆன போட்டோக்கள் வெளியாகியிருக்கிறது.
கீர்த்திக்கு இன்னொரு முறை கிறிஸ்தவ முறைப்படி திருமணம் ஆகியிருப்பதை தொடர்ந்து, பலரும் இவருக்கு மீண்டும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.