உலக அளவில் ஹிட் அடித்த அதிகம் வசூல் செய்த திரைப்படமான கேஜிஎப் 1 மற்றும் இரண்டில் நடித்த யாஷ் தற்போது டாக்ஸிக் மற்றும் ராமாயணம் படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இவர் ராமாயணம் படத்தில் வில்லனாக நடிப்பதற்கு எத்தனை கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என்று இங்குப் பார்க்கலாம்.
பிரசாந்த் நீல் மூலமாக மிகப்பெரிய எதிர்பார்க்காத வெற்றிப் படமாக கே ஜி எஃப் திரைப்படம் யாஷ் கிடைத்துள்ளது. இதில் இவரது மாசான நடிப்புக்கு உலகளவில் ரசிகர்கள் திரண்டனர். ராமாயணம் படத்தில், அமரன் படத்தில் நாயகியாக நடித்த சாய் பல்லவி நடித்து வருகிறார். மேலும் இதில் வில்லனாக உருவெடுக்கும் ராவணனாக யாஷ் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில் வில்லனாக நடிக்கும் யாஷ் எத்தனை கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என்று இங்குப் பார்க்கலாம்.
ராமாயணம் படத்தில் சீதையாகச் சாய் பல்லவியும், ராமராக ரன்பீர் கபூர் நடிக்கின்றனர்.
ராமாயணம் படம் தயாரிக்க சுமார் 835 கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது எனப் படக்குழு தகவல் கூறப்படுகிறது.
கைகேயியாக லாரா தத்தாவும், அனுமனாக சன்னி தியோலும் மற்றும் மந்தராக ஷீபா சத்தாவும் நடித்துள்ளனர்.
நித்தேஷ் திவாரியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான ராமாயணத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கிவிட்டது.
ரன்பீர் கபூர், யாஷ் மற்றும் சாய் பல்லவி நடித்துள்ள ராமாயணம் படத்தின் முதல் பாகம் 2026 ஆம் ஆண்டு வெளியாகும் என்று தகவல் கூறப்படுகிறது.
ராமாயணம் படத்தின் இரண்டாம் பாகம் 2027 இல் வெளியிடப்படும் என்று படத்தின் தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
டாக்ஸிக் படத்தில் பிசியாக நடித்து வரும் யாஷ் தற்போது ராமாயணம் படத்தில் வில்லனாக ராவணனாக உருவெடுத்து நடித்து வருகிறார்.
யாஷ் ராமாயணம் படத்தில் ராவணனாக வில்லனாக நடிப்பதற்கு சுமார் 200 கோடி சம்பளம் வாங்கி உள்ளதாகத் தகவல் சொல்லப்படுகிறது.