ஜலதோஷத்தை தடுக்கவும் மற்றும் குணப்படுத்தவும் சில அற்புத டிப்ஸ்

Home remedies for cold cough: குளிர்காலத்தில், வாழ்க்கை முறை முதல் உணவு வரை மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சளியும் இருமலும் வந்துவிட்டால் நாம் படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல. சளி, இருமல் வந்துவிட்டால், அதிலிருந்து இயற்கையான வழிமுறைகளைப் பயன்படுத்தியே மீண்டுவிடலாம். எப்படி என்று பார்ப்போம்.

1 /5

உப்புநீரில் வாயைக் கொப்பளித்தல்: வெதுவெதுப்பான உப்புநீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். இது தொண்டையில் ஏற்பட்ட வீக்கத்தைக் குறைக்கும், தொண்டை உறுத்தலை நீக்கும், சளியையும் குறைக்கும். 

2 /5

இஞ்சி: வறண்ட இருமலை இஞ்சி நீக்கக்கூடியது. உப்பு கலந்த இஞ்சியை சில நிமிடங்களுக்கு நன்கு மெல்லவும் இவை சளி, இருமலுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

3 /5

கருமிளகு டீ: கருமிளகு இருமல், சளிக்கு மிக நல்ல மருந்து. கருமிளகு டீ குடிப்பது தொண்டைவலியைக் குறைக்கும்.  

4 /5

பால் மற்றும் மஞ்சள்: சூடான பாலில் மஞ்சள் சேர்த்துப் பருகுவது சளியைப் போக்கும். பால் மற்றும் மஞ்சளில் நம் உடலுக்கு நன்மை செய்யக்கூடிய பல பொருட்கள் உள்ளன. குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் ஏற்றது மஞ்சள் பால். 

5 /5

எலுமிச்சை சிரப்: ஒரு வாணலியில் தேனை ஊற்றி, அதன் அடர்த்தி குறைகிற வரை சூடாக்கவும்.  இதனுடன் சிறிது எலுமிச்சைச் சாறு, லவங்கப்பட்டை சேர்த்துப் பயன்படுத்திவர சளி குறையும்.