சொல்ற பேச்சை கேட்காதவர்களை இப்படி ஸ்மார்ட்டாக டீல் பண்ணுங்க...!

Communication tips : உங்கள் பேச்சை யாரும் கேட்காதபோது, அவர்களின் கவனத்தை திசை திருப்ப நீங்கள் எப்படி ஸ்மார்ட்டாக செயல்பட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Communication tips : உங்கள் பேச்சை நெருங்கி பழகுபவர்களே காது கொடுத்து கேட்காதபோது மதிப்பில்லையோ என எண்ணத்தோன்றும். அப்படியான சூழலை நீங்கள் எப்படி ஸ்மார்டாக கையாள்வது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 

1 /12

நம் பேச்சை காது கொடுத்து கேட்கவில்லை என்ற ஏக்கம் பொதுவாக வாழ்க்கையில் எல்லோரும் ஏதாவது ஒருபடி நிலையில் எதிர்கொள்வோம். நம் பேச்சை கேட்கமாட்டார்கள் அல்லது பாதியிலேயே குறுக்கிட்டு முழுமையாக சொல்ல முடியாதபடி செய்வார்கள்.  

2 /12

தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் வேலை செய்யும் இடம் என எங்கு வேண்டுமானாலும் இப்படியான சூழல்கள் எழலாம். அது ஒருவிதமான வெறுப்பை நம்மில் ஏற்படுத்தும். இதற்கு சில காரணங்கள் இருக்கலாம்.

3 /12

அதாவது நம்மிடம் இருக்கும் பேசும் தன்மை, எல்லாம் தகவல்களையும் தெரிந்ததுபோல் வெளிக்காட்டிக் கொள்ளும் மனப்பான்மை, பொறுமையின்மை, பதட்டம், பிறர் பேசுவதை சுறுசுறுப்பாக காது கொடுத்து கேட்காமை கூட காரணமாக இருக்கலாம். 

4 /12

இந்த விஷயத்தை பொறுத்தவரை பிறர் மீது பழியை போடுவதைக் காட்டிலும் இருதரப்பிலுமே தவறு இருக்கலாம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதேபோல், அவர்களிடமும் பொறுமையாக கேட்கும் பழக்கம் இல்லாமல் இருக்கலாம், பிறரின் பேச்சை பொறுமையோடு கவனிக்க வேண்டும் என்ற நிதானமில்லாமல் இருக்கலாம்.

5 /12

அதனால் நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் உங்களின் தகவல் தொடர்பு திறமையை வளர்த்துக் கொள்வது தான். இதனை செய்யலாம் பிறரை தொடர்பு கொள்ள முயற்சித்தால் அவமதிப்பே மிஞ்சும். 

6 /12

அதனால் யாரிடமும் நீங்கள் சிறப்பானதொரு தகவல்தொடர்பு, பேசும் தன்மை இருக்க வேண்டும் என நினைத்தால் நல்ல சுவாரஸ்யமான கேள்விகளை கேளுங்கள். அந்த கேள்வியை மற்றவர்களும் பின்தொடரும்படி செய்யுங்கள். 

7 /12

நீங்கள் கேட்கும் கேள்விக்கு அவர்கள் ஆழமான பதிலை கொடுக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். அவர்கள் சொல்லும் பதிலுக்கு நீங்கள் கொடுக்கும் ரியாக்ஷன் அவர்களை மேலும் பதில் சொல்லும்படி இருக்க வேண்டும். உணர்ச்சிப்பூர்வமான பிணைப்பு இந்த இடத்தில் தான் உருவாகும். 

8 /12

அவர்களின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து நீங்கள் சொல்லும் பதில் அவர்களுக்கு நெருங்கிய உணர்வை ஏற்படுத்தும். அதற்கு முதலில் நீங்கள் அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்க வேண்டும். அப்போது தான் உங்களால் ரியாக்ட் செய்ய முடியும். 

9 /12

எந்தவொரு விஷயத்தையும் சொல்லி முடிக்கும் வரை பொறுமையாக இருக்க வேண்டும். எதிரில் இருப்பவர்கள் பெரும்பாலும் உங்கள் உடல் மொழியை வைத்து தான் நீங்கள் எப்படி ரியாக்ட் செய்கிறீர்கள் என்பதை அனுமானிப்பார்கள். அதனால் எப்போதும் பாசிட்டிவான உடல் மொழி உங்களிடத்தில் இருந்து வெளிப்பட வேண்டும். 

10 /12

எந்த இடத்திலும் எதிர்மறையான வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள். இறுக்கமான சூழல் வந்தால்கூட சிரிப்பை ஏற்படுத்தும் வகையில் வார்த்தைகளை உபயோகப்படுத்த வேண்டும். அது யார் மனதையும் புண்படுத்தாத வகையிலும், மனம்விட்டு சிரிக்கும் வகையிலும் இருக்க வேண்டும்.

11 /12

ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப பேசுவதை தவிர்த்துவிடுங்கள். உங்களின் பேச்சு அவர்களுக்கு சுவாரஸ்யத்தையும், ரிலாக்ஸையும் கொடுக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அடிக்கடி உங்களோடு பேசுவதற்கு அவர்கள் விரும்புவார்கள்.

12 /12

எனவே, நீங்கள் நிறைய படிக்க வேண்டும், நல்ல எண்ணங்களையும், சூழல்கள் குறித்தும் சிந்திக்க வேண்டும். மனதை எப்போதும் நிலையாக, தெளிவாக வைத்துக் கொள்ள வேண்டும். இவையெல்லாம் நீங்கள் பின்பற்றினால் தகவல் தொடர்பு விஷயமும் அதிகரிக்கும். உங்கள் பேச்சையும் எல்லோரும் காது கொடுத்து கேட்பார்கள்.