IND vs AUS: முதல் போட்டியை தவறவிடும் வீரர்கள் யார் யார்?

Border Gavaskar Trophy, IND vs AUS: டெஸ்ட் கிரிக்கெட்டில், உலகின் தலை சிறந்த அணிகளான ஆஸ்திரேலியா பலம் வாய்ந்த இந்திய அணியுடன் அதன் சொந்த மண்ணில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் களமிறங்குகிறது. இது இரண்டு கிரிக்கெட் ஜாம்பவான்களுக்கு இடையே அதிக தீவிரமான மோதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் டெஸ்ட் நாக்பூரில் இன்று தொடங்க உள்ளது. முதல் டெஸ்டைத் தவறவிடக்கூடிய சில நட்சத்திரங்கள் மற்றும் ஆஸ்திரேலியா, இந்தியா இடையேயான டெஸ்ட் தொடரில் பங்கேற்காத சில நட்சத்திரங்களை இங்கே காணலாம்.

  • Feb 09, 2023, 01:56 AM IST

 

 

 

 

 

 

 

1 /5

ரிஷப் பண்ட்: கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த ரிஷப் பந்த், ஆஸ்திரேலியா உடனான தொடருக்கு தேர்வாகவில்லை. 

2 /5

ஜஸ்பிரித் பும்ரா: நீண்டநாள் காயத்தில் இருந்து மீண்டு வந்துவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட பும்ரா, காயம் முழுமையாக குணமடையாததால், அறிவிக்கப்பட்ட இரண்டு போட்டிக்கான இந்திய அணியில் பும்ரா தேர்வாகவில்லை.

3 /5

மிட்செல் ஸ்டார்க்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பாகிஸிங் டே போட்டியில், கை விரலில் அடிப்பட்டது. அதன் காரணமாக இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் அவர் பங்கேற்க வாய்ப்பில்லை என தெரிகிறது. 

4 /5

ஜாஷ் ஹசில்வுட்: ஹசில்வுட்டிற்கு இடது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஹசில்வுட் முதல் போட்டியில் இருந்து விலக்கப்பட்டுள்ளார். 

5 /5

ஷ்ரேயஸ் ஐயர்: டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக இந்திய அணியின் மிடில் ஆர்டரில் ரன்களை குவித்து வந்த ஷ்ரேயஸ் ஐயர் முதல் டெஸ்டில் காயம் காரணமாக பங்கேற்கவில்லை.