IPO: 1500 கோடி ரூபாய் முதலீட்டை பங்குகள் மூலம் பெற திட்டமிடும் Officer's Choice விஸ்கி!

Allied Blenders IPO: Officer's Choice பிராண்ட் விஸ்கி தயாரிப்பாளரான Allied Blenders நிறுவனம், ரூ.1,500 கோடி ஆரம்ப பொது வழங்கல் (IPO) மூலம் நிதி திரட்டுகிறது. இந்த நடைமுறை ஜூன் 25 முதல் தொடங்குகிறது. 

ஆஃபிசர்ஸ் சாய்ஸ் விஸ்கி நிறுவனத்தின் பங்கு விலை 267-281 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

1 /8

உள்நாட்டு பங்குச் சந்தை தொடர்ந்து ஏற்றத்தாழ்வுகளை கண்டு வரும் நிலையில், முதன்மை சந்தையும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. ஐபிஓக்கள் ஒன்றன் பின் ஒன்றாக திறக்கப்பட்டு முதலீட்டாளர்களுக்கு நல்ல வருமானம் கொடுத்து வருகிறது

2 /8

கடந்த சில வாரங்களில் Awfis Space, Go Digit, Ixig என பல IPOக்கள் களம் இறங்கின. ஐபிஓவில் முதலீடு செய்வது சில்லறை முதலீட்டாளர்களுக்கு சந்தையில் நல்ல வருமானம் ஈட்டுவதற்கான ஒரு விருப்பமாக மாறியுள்ளது.

3 /8

விஸ்கி தயாரிக்கும் நிறுவனமான Allied Blenders, அடுத்த வாரம் IPO கொண்டு வருகிறது, நிறுவனத்தின் உரிமையாளர்கள் பங்குகளை விற்கின்றனர்  

4 /8

ஆஃபீசர்ஸ் சாய்ஸ் விஸ்கி தயாரிப்பாளரான அலைட் பிளெண்டர்ஸ் ரூ.1,500 கோடி அளவிலான பங்குகளை ஐபிஓவில் விற்பனை செய்யும். 

5 /8

ஆரம்ப பொதுப் பங்கு விற்பனை ஜூன் 25ஆம் தேதி தொடங்கும். ஒரு பங்கின் விலை வரம்பை ரூ.267-281 என நிறுவனம் நிர்ணயித்துள்ளது

6 /8

​​ஐபிஓ ஜூன் 25 முதல் 27 வரை திறந்திருக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. பெரிய முதலீட்டாளர்கள் ஜூன் 24 அன்று பங்குகளை வாங்க முடியும்.

7 /8

பங்கு வெளியீட்டிற்குப் பிறகு நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூ.7,860 கோடியாக இருக்கும் தரகு நிறுவனங்கள் மதிப்பிட்டுள்ளன. ஆரம்ப பங்கு விற்பனையில் 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பங்குகள் வெளியிடப்படும்.

8 /8

இது தவிர, ரூ.500 கோடி மதிப்புள்ள பங்குகளை நிறுவகர்கள் விற்பனை செய்வதற்கான வாய்ப்பும் உள்ளது. OFS இன் கீழ், பினா கிஷோர் சாப்ரியா, ரேஷாம் சாப்ரியா, ஜிதேந்திர ஹேம்தேவ் மற்றும் நீஷா கிஷோர் சாப்ரியா ஆகியோர் பங்குகளை விற்பார்கள்.