J&K நடுக்கும் குளிரிலும் வாக்களிக்கும் 100 வயது மூதாட்டி!

கடமைக்கும் வயதுக்கும் சம்பந்தமே கிடையாது என்பதை உணர்த்துகிறார் கணேரு தேவி என்ற இந்த 100 வயது மூதாட்டி. வயதில் மட்டும் மூத்தவர் அல்ல, கடமை உணர்விலும் பெரியவர் என்று 100 வயது இந்திய குடிமகள் நிரூபித்திருக்கிறார்...

ஜம்மு-காஷ்மீர்: தோடா மாவட்டத்தில் நடைபெறும் மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் (District Development Council(DDC) தேர்தலின் 6 வது கட்ட வாக்குப் பதிவில் கணேரு தேவி என்ற 100 வயது பெண் வாக்களித்தார். இவரை ஜனநாயக காவலாளி என்று சொன்னால் சரியாகவே இருக்கும்.  "வளர்ச்சி மற்றும் பொதுப்பணிகளுக்கு வாக்களிக்க நான் இங்கு வந்துள்ளேன்" என்று 100 வயது மூதாட்டி கூறுகிறார்

(Photo Courtesy: ANI)

Also Read | PARLIAMENT ATTACK 2001: 'கோழைத்தனமான தாக்குதலை ஒருபோதும் மறக்கமாட்டோம்’

1 /6

வயதை காரணம் காட்டி வாக்களிக்க வராமல் இருந்தால் 100 வயது கணேரு தேவியை யாரும் குறை சொல்லியிருக்க மாட்டார்கள். ஜனநாயகத்தை சீர்படுத்த தனது பங்களிப்பை கொடுக்க வேண்டியது அவசியம் என்ற உணர்வை இதுபோன்ற செய்திகள் நமக்குக் கொடுக்கின்றன.

2 /6

வாக்களிப்பது என்பது பிறருக்காக அல்ல, நமக்காக நாம் செய்ய வேண்டிய கடமை. நாம் நேசிப்பவர்களுக்காகவும், நம்மை நேசிப்பவர்களுக்காகவும், நம் நாட்டின் வளர்ச்சிக்காகவும் வாக்களிப்பது அவசியம் என்பதை இந்த மூதாட்டியின் கடமையுணர்ச்சி உணர்த்துகிறது.  

3 /6

மக்களால் மக்களுக்காக செயல்படும் அரசை சரியாக வழிநடத்த நாம் வாக்களிக்க வேண்டியது அவசியம். அதற்கு வயது வித்தியாசம் இல்லை என்பதை நடுக்கும் குளிரிலும் வந்து வாக்களிக்கும் மூதாட்டி சொல்லும் செய்தி...

4 /6

 "வளர்ச்சி மற்றும் பொதுப்பணிகளுக்கு வாக்களிக்க நான் இங்கு வந்துள்ளேன்" என்று 100 வயது மூதாட்டி கூறுகிறார்

5 /6

போராடி பெற்ற வாக்களிக்கும் உரிமையை பாராட்டி நாமாகவே முன்வந்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்பதை உணர்த்தும் இன்றைய செய்தி இது... 

6 /6

வயதில் மட்டும் மூத்தவர் அல்ல, கடமை உணர்விலும் பெரியவர் என்று 100 வயது இந்திய குடிமகள் நிரூபித்திருக்கிறார்...