500 ஆண்டுக்கு பின் குரு ஆட்டம் தொடங்கியாச்சு.. இந்த ராசிகளுக்கு பொற்காலம்

Guru Margi 2024 effect: 2023 ஆம் ஆண்டின் கடைசி நாளில், தேவகுரு வியாழன் மேஷ ராசியில் வக்ர நிவர்த்தி அடைய உள்ளார். வியாழனின் திசை மாற்றம் அனைத்து 12 ராசிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

 

Jupiter Direct 2024 effect: ஜோதிடத்தின் பார்வையில், 2023 ஆம் ஆண்டின் கடைசி நாள் மிகவும் சிறப்பானதாக இருக்கும். ஏனெனில் டிசம்பர் 31, 2023 அன்று, தேவகுரு வியாழன் திசை மாறி நேர் கதியில் பயணிக்கப் போகிறார். இதமால் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது, ​​வியாழனின் பிற்போக்கு அல்லது தலைகீழ் இயக்கத்தால் சிக்கல்களை எதிர்கொள்பவர்கள் நிவாரணம் பெறுவார்கள். வேலையில் வெற்றி பெறத் தொடங்குவீர்கள். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக தொடங்கும். எனவே 2024ல் குரு பெயர்ச்சிக்கு முன் எந்த ராசிக்காரர்களுக்கு குரு வக்ர நிவர்த்தி பலன்களைத் தரும் என்பதை தெரிந்து கொள்வோம்.

 

1 /6

கடகம்: குரு வக்ர நிவர்த்தியால் கடக ராசிக்காரர்களுக்கு தொழிலில் பெரும் வெற்றியைத் தரும். தொழிலில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உங்கள் பணி பாராட்டப்படும். மூத்தவர்களின் உதவி கிடைக்கும். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். சொத்து சம்பந்தமான விஷயங்கள் சுமூகமாகும்.

2 /6

சிம்மம்: 2024ல் சமூகத்தில் இழந்த நற்பெயரைப் பெறுவீர்கள். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். விரும்பிய பதவி கிடைக்கும். பழைய பிரச்சனைகளில் இருந்து ஓரளவு நிம்மதி கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். நிதி ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.

3 /6

கன்னி: 2024-ல் கன்னி ராசிக்காரர்களுக்கு குரு வக்ர நிவர்த்தியால் சிறப்பான பலன்களைத் தரும். எதிர்பாராத இடங்களிலிருந்து நிதி ஆதாயம் உண்டாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். உங்களுக்கு ஒரு பெரிய பொன்னான வாய்ப்பு கிடைக்கும். வீட்டில் மகிழ்ச்சி நிலவும்.

4 /6

தனுசு: உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் மற்றும் மன அழுத்தம் நீங்கும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். திருமணமானவர்கள் தங்கள் துணையின் ஆதரவையும் அன்பையும் பெறுவார்கள். உங்கள் தொழிலிலும் புதிய உயரங்களை அடைவீர்கள்.

5 /6

மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு பண பலன்கள் கிடைக்கும். உங்களின் பொருளாதார பிரச்சனைகள் நீங்கும். வியாபாரம் விரிவடையும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி, அன்பு அதிகரிக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகளை நடத்தலாம்.

6 /6

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.